திருப்பரங்குன்றத்தில் நாளை கோலாகல கொடியேற்றம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி திருவிழா வருகிற 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 12 மாதமும் திருவிழா நடைபெறுவது வழக்கம் ஆனால் இந்த கோவிலுக்கான தனித்துவம் வாய்ந்த திருவிழாவாக பங்குனித் திருவிழா வெகு விமர்ச்சையாக கொண்டாடப்படும். இதில் பங்குனி திருவிழா15 நாட்கள் கொண்டாடப்படும்.

அதேபோல் இந்த ஆண்டிற்கான பங்குனி பெருவிழா நாளை செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி முதல் 11 மணிக்குள் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கவிருக்கிறது.

திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம்:

இத்திருவிழாவில் 21ம் தேதி முருகனுக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெறும்.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து பிரியாவிடையுடன் சொக்கநாதர், மீனாட்சி அம்மன் எழுந்தருளி முருகனின் திருக்கல்யாணத்தை நடத்தி வைப்பார்கள். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 22-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடக்கிறது இதில் கோவில் வாசலில் இருந்து பெரிய தேர் கிரிவலம் ஆக வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுப்பார்கள் திருவிழாவின் நிறைவாக 23ஆம் தேதி தீர்த்த உற்சவம் நடைபெறும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!