ஐய்யப்பனின் ஐந்து படை வீடுகளில் ஒன்றான அச்சன்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது இங்கு ஆண்டுதோறும் தணு மாதம் ( மார்கழி ) ஒன்றாம் தேதி முதல் பத்தாம் தேதி வரை பத்து நாட்கள் ஆராட்டு திருவிழா நடைபெறும். அதனை முன்னிட்டு திருஆபரணபெட்டி ஊர்வலம் நடைபெறும். கொடியேற்ற தினமான மார்கழி ஒன்றாம் தேதிக்கு முதல் நாள் அதாவது கார்த்திகை மாதம் கடைசி நாள் அன்று புனலூர் கிருஷ்ணன் கோவிலில் உள்ள அரசு பாதுகாப்பு பெட்டக அரங்கில் இருந்து அதற்கென பிரத்யேகமாக அலங்கரிக்கபட்ட வாகனத்தில் தேவசம்போர்டு அதிகாரிகள் தலைமையில் கேரள போலிஸ் பாதுகாப்புடன் புறப்பட்டு வழி நெடுக பக்தர்கள் வரவேற்புடன் ஆரியங்காவு வழியாக தமிழகத்தை அடைந்து தமிழக மற்றும் கேரள போலீஸாரின் பலத்த பாதுகாப்புடன் புளியரை, செங்கோட்டை வழியாக தமிழக பக்தர்களும் தரிசிக்க வேண்டும் என்று தென்காசி வரை ஆபரணபெட்டி வாகனம் வந்து பின் பண்பொழி, மேக்கரை வழியாக அச்சன்கோவில் சென்றடையும். அன்றைய தினமே திருஆபரணம் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு ராஐ அலங்காரத்தில் அருள்பாலிப்பார்.

பின் மறுநாள் காலை கொடியேற்றபட்டு முதல் நாள் திரு விழா ஆரம்பமாகும். தொடந்து பத்து நாட்கள் திருவிழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் கலசபூஜை, உஷபுஜை, உற்ஷவபலி பூஜை என்று விஷேச பூஜைகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். மேலும் தினம் தோறும் கலை நிகழ்ச்சிகள், கருப்பன் துள்ளல், ஆடல், பாடல்கள், நாடகங்கள், நாட்டியங்கள் என்று பற்பல நிகழ்ச்சிகளும், ஒன்பதாம் திருவிழா அன்று கேரளத்தில் எங்கும் இல்லாத வகையில் தேரோட்டமும் நடைபெறும். பின் பத்தாம் நாள் அன்று சுவாமி ஆராட்டுடன் திருவிழா நிறைவுபெறும். அதுதான் காலகாலமாக வழக்கம் என்றபோதிலும் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் என்ற நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு ஆலோசனையின் பேரில் இந்த வருடம் திருஆபரணபெட்டி ஊர்வலம், தேரோட்டம் உள்ளிட்ட அனைத்து திருவிழா நிகழ்ச்சிகளும் ரத்து செய்யபட்டு கோவிலுக்குள் நடைபெற வேண்டிய சிறப்பு பூஜைகள் மட்டும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வருடம் திருஆபரணபெட்டி தென்காசி உள்ளிட்ட எந்த தமிழக பகுதிக்கும் வராது. புனலூரில் இருந்து நேரடியாக பாதுகாக்கபட்ட வனபகுதி வழியாக அச்சன்கோவில் கொண்டு செல்லபடுகிறது. பின் மறுநாள் கோவில் கொடியேற்றம் மற்றும் அதனை தொடர்ந்து ஐய்யப்பனுக்கு நடத்த வேண்டிய அனைத்து விஷேச சிறப்பு பூஜைகள் எல்லாமே பத்து நாட்களும் தொடர்ந்து நடைபெறும். பத்தாம் நாள் ஆரட்டும் பதினொன்றாவது நாள் மண்டலபூஜையும் சிறப்பாக நடைபெறும். ஆனால் கோவிலுக்கு வெளியே நடைபெறும் மக்கள் கூட்டம் கூடும் நிகழ்ச்சிகளான தேரோட்டம், கருப்பன் துள்ளல், ஊர்வலங்கள், கலைநிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் என அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. பக்தர்கள் ஈ பாஸ் எடுத்து வந்து ஐயப்பனை தரிசித்து செல்லலாம். மேலும் அச்சன்கோவிலில் ஐயப்பனுக்கு தினமும் இரு வேளை நெய் அபிஷேகம் நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு நிர்மால்ய பூஜைக்கு பின்னும் மதியம் 12 மணி உச்சி கால பூஜைக்கு முன்னும் 11.30 மணி அளவில் நெய் அபிஷேகம் நடைபெறும் மாலை அணிந்த பக்தர்கள் ஈ பாஸ் மட்டும் எடுத்து வந்து உரிய நேரத்திர்க்கு உள்ளாக வந்து தங்களது நெய்யை ஒப்படைத்து நெய் அபிஷேகம் செய்து வாங்கி செல்லலாம் என்றும் கோவில் சார்பாக தெரிவித்து கொள்ளபடுகிறது. என்று இத்தகவல்களை திருஆபரணபெட்டி கமிட்டி தலைவர் ACSGஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
