திருடர்களின் கூடாரமாக மாறிவரும் வடசேரி பேருந்து நிலையம்-நூதன முறையில் தொடரும் திருட்டுகளால் பயணிகள் அச்சம்.

கன்னியாகுரி மாவட்டத்தின் முக்கிய பகுதி வடசேரி ஆகும். இங்குதான் மாவட்டத்தின் முக்கிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்துதான் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும்அசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வடசேரி பஸ் நிலையத்தில் சமீபகாலமாக வலம்வரும் பிக்பாக்கெட், திருடர்கள் உட்பட சமூக விரோதக் கும்பல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் காவல்துறை திணறுகிறது.இதனால் மாவட்டத்தில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. வழிபாட்டுத்தலங்கள், கடைகள், வீடுகளில் என ஒருபுறம் திருட்டுக்கள் நடக்க மறுபுறம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பஸ்கள் மற்றும் பஸ் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகளில் திருட்டுக்கள் நடக்கின்றன.

இதில் வடசேரி பஸ் நிலையம் திருடர்களின் புகலிடமாக மாறியுள்ளது. கொரானாவுக்கு பின் பயணிகளின் வருகை குறைந்து இப்போதுதான் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வடசேரி பஸ் நிலையத்தில் பிளாட்பார பகுதிகள் வெளிப்புறப் பகுதிகளில் நரிக்குறவர்கள் ஆக்கிரமித்துள்ளன. பிச்சைக்காரர்கள், ஹோமோசக்ஸ் கும்பல், விபச்சார கும்பல் நடமாட்டத்திற்கு மத்தியில் திருட்டு கும்பலின் அட்டூழியம் அதிகரித்துள்ளது.

பஸ் நிலையத்தில் வெளிப்புற பகுதிகளில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. வெளியூர்களில் இருந்து வரும் நபர்கள் சிலர் மது குடித்து விட்டு போதையில் பஸ் நிலையத்தில் கிடப்பது வழக்கமாக உள்ளது. இது போன்ற நபர்களை குறிவைத்து அவர்களிடமிருந்து பணம், நகைகள், வாட்ச், செல்போன் உள்ளிட்டவற்றை ஒரு கும்பல் திருடிச் செல்கிறது. ஒரு சிலரிடம் பேண்ட் சட்டை வரை கழற்றி விடுகிறார்கள். இரவு நேரங்களில் ஆள் நடமாட்டமில்லாதது திருட்டு கும்பலுக்கு வசதியாக உள்ளது. இது தவிர பகல் வேளைகளில் பஸ்களில் நூதன முறையில் கைவரிசை காட்டும் திருட்டு கும்பல் அதிகரித்து உள்ளது. உடலில் இலேசாக உரசுவது போல் சென்று சட்டைப் பையில் உள்ள செல்போன் பணம் உள்ளிட்டவற்றைச் ஆகிவிடுகிறார்கள். இந்த கும்பலில் பெண்களும் உள்ளனர். பொருட்களை திருடி விட்டு பஸ் நிலைய நடைபாதை பகுதியிலோ பிளாட்பாரத்திலோ நாடோடிகள் போல் படுத்துக் கொள்வது இந்த திருட்டு கும்பலின் வாடிக்கையாக உள்ளது.

இவர்களை பலமுறை போலீசார் பிடித்து எச்சரித்து வழக்கு பதிவு செய்தாலும் கூட இந்த திருட்டு கும்பல் மீண்டும் மீண்டும் பயணிகளை குறிவைத்து கைவரிசை காட்டுவதை நிறுத்தவில்லை. வடசேரி பஸ் நிலையம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இவற்றில் தற்போது சில கேமராக்கள் இயங்கவில்லை. ஜனவரியில் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது.இதனால் பஸ் நிலையத்தில் மக்களின் நடமாட்டம் அதிகரிக்கும் எனவே அதற்கு முன் பஸ்நிலையத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். 24 மணிநேரமும் பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் போலீசார் நியமிக்கப்பட வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

error: Content is protected !!