சுனாமியால் இறந்துபோன மக்களை அடக்கம் செய்த இடத்தில் கண்ணீர் அஞ்சலி.

டிசம்பர் 26 நாளான நேற்று தமிழ்நாட்டின் கருப்பு நாள் பல ஆயிரக்கணக்கான உயிர்களை பறிகொடுத்த நாளான இன்று அதனை நினைவுகூரும் விதமாக கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி மீனவ கிராமத்தில் நினைவு திருப்பலி நிறைவேற்றி சுனாமியால் இறந்துபோன மக்களை ஒன்றாக அடக்கம் செய்த இடத்தில் மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி.

2004 ஆம் ஆண்டு சுமித்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக தமிழகத்தில் சுனாமி எனும் ஆழிப்பேரலை தாக்கியது அதன் காரணமாக பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் இதனை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடற்கரை கிராமங்களிலும் நினைவு திருப்பலி மற்றும் கல்லறை தோட்டங்களில் அடக்கம் செய்யபட்ட தங்கள் உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம் .16ம் ஆண்டு நினைவு தினமான இன்று கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி மீனவர் கிராமத்தில் நினைவு திருப்பலி நிறைவேற்றப்பட்டது பின்னர் ஆலயத்திலிருந்து கல்லறை தோட்டம் வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது பின்னர்
சுனாமியால் இறந்து போனவர்களை ஒன்றாக அடக்கம் செய்யபட்ட கல்லறை மற்றும்நினைவு ஸ்தூபியில் மலர்களை தூவியும் மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர் இவர்கள் சுனாமி பேரலையில் எப்படி உயிர்தப்பினர் என்பதையும் தாங்கள் உறவினர்கள் தங்களது இருந்து பிரிந்து சென்றதையும் கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தனர் மேலும் சுனாமி எனும் ஆழிப்பேரலை எந்த நாட்டிலும் வரக்கூடாது என இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்தனர்

Leave a Reply

error: Content is protected !!