குமரியின் சபரிமலை குபேர ஐய்யப்ப சுவாமி கோயிலுக்கு கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் ஆபரண பெட்டி ஊர்வலம்.

குமரியின் சபரிமலை
பொட்டல்குளம் அய்யன் மலை குபேர அய்யப்ப சுவாமி கோயிலுக்கு கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் ஆபரண பெட்டி ஊர்வலம்.
பி.டி.செல்வகுமார் ஊர்வலமாக எடுத்துச் சென்று வழங்கினார்.

குமரியின் சபரிமலை என அழைக்கப்படும் பொட்டல்குளம் அய்யன் மலை குபேர ஐயப்ப சுவாமி கோவிலில் கேரள மாநிலம் சபரிமலையில் பின்பற்றப்படும் அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகிறது.

அதன்படி கேரளா சபரிமலை ஐயப்பன் கோவிலில் பின்பற்றப்படும் மிக முக்கியமான நிகழ்வான பந்தள மகாராஜாவால் வழங்கப்படும் ஆபரண பெட்டி கொண்டு செல்லும் நிகழ்ச்சியை போல இங்கும் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர்
பி.டி.செல்வகுமார் ஆபரண பெட்டியை மேளதாளம் முழங்க குதிரைகளின் அணிவகுப்புடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று கோயிலுக்கு வழங்கினார்.
மேலும் இந்த நிகழ்வு வருடம் தோறும் நடைபெறும் எனவும் கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கு கலப்பை மக்கள் இயக்க சட்ட ஆலோசகர் வக்கீல் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தலைவர் சிவபன்னீர் செல்வன், மாவட்ட செயலாளர் ஜாண்கிறிஸ்டோபர், எஸ் எம் சி கூட்டுறவு சேர்மன் வங்கி விஜய் கிருஷ்ணா, முன்னாள் நாகர்கோவில் நகர்மன்ற தலைவர் மீனாதேவ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐயப்பன் கோவில் நிறுவனர் தியாகராஜ சுவாமிகள் ஆபரணப் பெட்டியை பெற்றுக்கொண்டு ஐய்யப்ப சுவாமிக்கு அணிவித்து பூஜை செய்தார்.

மேலும் கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல இயலாத பக்தர்கள் கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் செய்யப்படும் அனைத்துவிதமான நடைமுறைகளையும் செய்து வழிபட்டு செல்கின்றனர்.

அந்த வகையில் ஆபரண பெட்டி ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நிகழ்வின்போது சென்னை பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் ஆபரண பெட்டி கொண்டு செல்லும் ஊர்வலத்தில் பங்கேற்று, கோயிலுக்குச் சென்று கேரளா சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு செய்யப்படுகின்ற அனைத்து விதமான நடைமுறைகளையும் செய்து வழிபாடு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!