கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை அருகே வடக்கு மார்த்தால் பகுதியை சேர்ந்த ராஜன் என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணையில் உள்ள தண்ணீர் டேங்கில் பூச்சு கொல்லி மருந்து மற்றும் பிளீச்சிங் பெளடரை மர்ம நபர்கள் கலந்தனர். இதில் விஷம் கலந்த தண்ணீரை குடித்த சுமார் 6 ஆயிரம் கோழிகள் இறந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை அருகே வடக்கு மார்த்தால் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவர் செண்பகராமன் புதூர் அருகே கறி கோழி பண்ணை வைத்து உள்ளார். மேலும் மொத்தமாக கறி கோழிகளை குமரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கோழிபண்ணையில் கோழிகளுக்கு தண்ணீர் அருந்துவதற்காக அமைத்துள்ள தண்ணீர் டேங்கில் பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் பிளிசீங் பவுடரை மர்ம நபர்கள் கலந்து உள்ளார்கள். இதனால் விஷம் கலந்த தண்ணீரை குடித்த சுமார் ஆறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் துடிதுடித்து பரிதாபமாக இறந்தது. தண்ணீர் டேங்கில் விஷத்தை கலந்தது யார் என்பது குறித்து ஆரல்வாய்மொழி போலிஸார் விசாரனை செய்து வருகிறார்கள்.