அஞ்சுகிராமம் ஸ்ரீஅழகியவிநாயகர் ஆலயத்தில் இருந்து திருச்செந்தூருக்கு காவடி பாதயாத்திரை ஊர்வலம் புறப்பட்டு சென்றதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் ஸ்ரீஅழகிய விநாயகர் கோவிலில் இருந்து ஆண்டு தோறும் திருச்செந்தூரில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பக்தர்கள் காவடி கட்டி புறப்பட்டுச் செல்வது வழக்கம்.
அந்த வகையில் தற்போது திருச்செந்தூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை அஞ்சுகிராமம் விநாயகர் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் சந்தனம், பன்னீர் காவடி கட்டி பூஜைகள் செய்தனர். பின்னர் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.
காவடி பக்தர்களை ஆலய தலைவர் சிவக்குமார், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் அரவிந்த், செயற்குழு உறுப்பினர்கள் வீடியோ குமார், காந்திராஜன், சந்திரன் மற்றும் பக்தர்கள் வழி அனுப்பி வைத்தனர். இவர்களுக்கு வழிநெடுகிலும் உள்ள முருக பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.