கன்னியாகுமரி மனோன்மணியம் சுந்தரனார் உறுப்புக் கல்லூரி மற்றும் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் மையம் சார்பில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி. மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக உறுப்பு கல்லூரியும், நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், இணைந்து தொழில்முறை வழிகாட்டுதல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் மனோன்மணயம் சுந்தரனார் பல்கலைக் கழக உறுப்பு கல்லூரி, பால்குளத்தில் வைத்து நடைபெற்றது.
இவ்விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர். பி. மர்பி அலெக்சாண்டர் முன்னிலை வைத்தார். மாவட்ட ஆட்சி தலைவர் அரவிந்த் தலைமை ஏற்று கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை தொடங்கி வைத்து விழாப் பேருரை ஆற்றி பரிசு வழங்கினார். திறன் மேம்பாடு பற்றி மாவட்ட திறன் பயிற்சி மைய உதவி இயக்குநர் ஜார்ஜ் பிராங்க்ளின் உரையாற்றினார். போட்டி தேர்வுகளில் எப்படி வெற்றி பெறுவது என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (தொ.வ), ஜெரிபா ஜி. இம்மானுவேல் பேசினார் .
சுயவேலைவாய்ப்பு மற்றும் அரசு கடனுதவி பெறுவது தொடர்பாக மாவட்ட தொழில்மைய பொது மேளாலர் சுவர்ணலதா
உரையாற்றினார்.
துணை இயக்குனர் முன்னாள் படைவீரர் மணிவண்ணன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் கல்லூரி பேராசிரியர் சுரேந்திரன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சகாய ஆண்டனி நன்றி கூறினார்.