மதுரையில் பா.ஜ.க பிரமுகரைக் கண்டித்து கண்டண ஆர்ப்பாட்டம்.

மத மோதலை தூண்டும் வகையில்பேசிய பாஜக நிர்வாகி கல்யாண ராமனை கண்டித்து மதுரையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் கிரைம் பிராஞ்ச் அருகே பாஜக பிரமுகர் கல்யாணராமனை கண்டித்தும், அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத்-ன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிரைம் பிராஞ்ச் அருகே நடைபெற்ற சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், கல்யாணரா மனுக்கு எதிராகவும், அவரை கைது செய்ய வேண்டும் என முழக்கமிட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது. இதனால், 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

error: Content is protected !!