தனி விமானத்தில் பறந்து எங்கே சென்றார் ஓ.பி. ஆர்..கருப்புப் பண முதலீடா?

தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பி.எஸ் அவர்களின் மகன் MP ரவீந்திரநாத் மொரீசியஸிலிருந்து தனி விமானத்தில் பிரான்சுக்குச் சென்றுள்ளார். அவர், தனி விமானத்தில் மாலத்தீவுக்கும் அங்கிருந்து மொரீசியசுக்கும் போனதே ஓ.பி.எஸ்.க்கு கடுமையான கோபத்தை உண்டுபண்ணியது.

முதலில் அவர் உல்லாச சுற்றுப் பயணம் செய்யப் போவதாகத்தான் செய்திகள் வந்தது. அந்த உல்லாச சுற்றுப் பயணம் மாலத்தீவுடன் முடியாமல், கருப்புப் பண முதலீடுகளுக்குப் பெயர் பெற்ற மொரீசியஸ் வரை நீண்டது. உடனே இதை சீரியஸாக மத்திய அமலாக்கத்துறையும் எடுத்துக்கொண்டு விசாரிக்க ஆரம்பித்தது. அவர்களிடம் இன்பச் சுற்றுலாவுக்காக ரவீந்திரநாத் சென்றிருக்கிறார் என ஓ.பி.எஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதை லைட்டாக எடுத்துக்கொண்ட மத்திய அரசு அவரது பயணத்தைப் பற்றி கண்டுகொள்ளவில்லை. ஆனால், மொரீசியஸில் இருந்து ரவீந்திரநாத் ஃபிரான்ஸ் நோக்கி விமானத்தைச் செலுத்தியுள்ளார். இது மத்திய அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மத்திய அரசால் எங்களை ஒன்றுமே செய்ய முடியாது. ஏனென்றால் விமானத்தில் ரவீந்திரநாத்துடன், மத்திய அரசில் இடம்பெற்றிருக்கும் இரண்டு அமைச்சர்களின் பிள்ளைகள் வருகிறார்கள் என்கிறார்கள் ரவீந்திரநாத்தின் நண்பர்கள்.

மொரீசியஸ், ஃபிரான்ஸ் ஆகியவற்றைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்தின் பயணம் நீள்கிறது. அனைத்து இடங்களிலும் சொத்துகள் வாங்கிக் குவிப்பதே இந்தப் பயணத்தின் நோக்கம் என்று அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தகவல்களை பரப்பி வருகின்றனர்.

Leave a Reply

error: Content is protected !!