திருப்பரங்குன்றம்: பால்சுனை கண்ட சிவன் கோயிலில் பிரதோச வழிபாடு…

தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடு என போற்றப்பட்டு வரும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின், மலைக்கு பின்புறத்தில் தென்பரங்குன்றத்தில் அமைந்துள்ள பால்சுனை கண்ட சிவன் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பால், பழம், பன்னீா், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு நடைபெற்ற சிறப்புப் பூஜையில் கோயில் சிவாச்சாரியா்கள், ஊழியா்கள் உட்பட பக்தா்கள் சிலா் மட்டுமே கலந்து கொண்டனா்.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக அதிகப்படியான பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. பால் சுனை கண்ட சிவபெருமானுக்கு நடைபெற்ற பிரதோஷ சிறப்புப் பூஜையைக் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு பிரதோச வழிபாடு செய்தனா்.

Leave a Reply

error: Content is protected !!