
“சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இந்தியில் சுவரொட்டி..”
மதுரை மண் ஏற்கனவே தொழில் வணிகத்தில் மார்வாடிகள் மற்றும் இந்தி பேசும் வடநாட்டவர்களின் கோட்டையாக வளர்ந்து வருகிறது. அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த சுவரொட்டி அமைந்துள்ளதா..? என்ற அச்சத்தை மதுரை வணிகர்களிடையே ஏற்படுத்துகிறது.
யாருக்காக இந்த சுவரொட்டி..?
சுவரொட்டி என்றாலே ஒரு விசயத்தை பலர் அறிந்து கொள்ள ஒட்டப்படுவது தான் வழக்கம் ஆனால் இங்கு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில் தமிழில் இல்லாமல் இந்தியில் இருப்பது,மார்வாடியினரும்,வடநாட்டவரும் அறிந்து கொள்ள ஒட்டப்பட்ட சுவரொட்டியா???

இதைப்பார்த்த பொதுமக்கள் சுவரொட்டி முழுவதும் இந்தி மொழியில் இருந்ததால் என்னவென்று புரியாமல்..! மதுரையில் தான் உள்ளோமா..? அல்லது வடநாட்டில் உள்ளோமா..? என குழப்பமடைந்தனர்.