ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கோரிக்கை!! திருப்பரங்குன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளின் முக்கியமான பத்து கோரிக்கைகளை தெரிவிக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், குமரன் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல ரோப் கார் வசதி வேண்டும். திருப்பரங்குன்றம் பகுதிக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். மேலும் இங்குள்ள காய்கறி சந்தையை நவீனப்படுத்தி புதியகட்டடங்கள் கட்டித்தர வேண்டும்.பௌர்ணமி தோறும் வரும் கிரிவலபக்தர்களின் வசதிக்காக கிரிவலப் பாதையை அகலப்படுத்தவேண்டும். திருந கர் முதல் பஸ் நிறுத்தத்தில் இருந்து எட்டாவது பஸ் நிறுத்தம் வரை சாலை நடுவே வைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களை அகற்றி சாலை ஓரத்தில் வைக்க வேண்டும். பானாங்குளம் கண்மாயை சுற்றி நடைபாதை மற்றும் பூங்கா அமைக்க வேண்டும்.நிலையூரிலிருந்து கூத்தியார்குண்டு வரையிலும், விளாச்சேரியில் இருந்து சீனிவாசகாலனி நான்குவழிச்சாலை வரையிலும் சாலையை அகலப்படுத்த வேண்டும்.வடபழஞ்சி தென்பழஞ்சி, சாக்கிலிபட்டி, தனக்கன்குளம், தோப்பூர், வேடர்புளியங்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர்வழிச்சாலை அமைத்து விவசாயத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடம் அளித்துள்ளேன்.இவற்றை விரைந்து நிறைவேற்றித்தர தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன்
என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.