உலகப்புகழ் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 800 காளைகள்! 300 மாடுபிடி வீரர்கள்! 1300 போலீசார்கள்!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி தை பொங்கல் அன்று நடை பெறும்.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நாளை காலை 8 மணிக்கு துவங்கி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகள் பங்குபெறவும். மாடு பிடி வீரர்கள் 300 பேர்களுக்கு என மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

300 மாடுபிடி வீரர்கள் 50 பேர் கொண்ட 6 குழுவாக பிரிக்கப்பட்டு 6 வண்ணங்கலில் பனியன், ஷார்ட்ஸ் வழங்கப்படுகிறது.

மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்காத காளைகள் கொண்டுவர வாகன சான்று, மாடுபிடி வீரர்களுக்கான கொரானா சான்று ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மாடுபிடி வீரர்களுக்கான உடல்தகுதி சான்று மற்றும் பரிசோதனை முடிவுக்கு பின் வீரர்களுக்கு பனியன் வழங்கப்பட்டு களத்தில் மாடு பிடிக்க இறக்கப்படுவார்கள்.

கால்நடைத்துறை இணை இயக்குநர் Dr. நடராஜகுமார், உதவி இயக்குநர் Dr. சரவணன் ஆகியோர் தலைமையில் 25 கால்நடை மருத்துவர்கள், 76 கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் குழுவினர் தயார்நிலையில் உள்ளனர். மாடுகள் பரிசோதனை மையத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் மேல் காயங்கள், கலர் பொடிகள், கொம்பு கூர்மை பரிசோதிக்கப்பட்டு பரிசோதைக்கு பின் காளைகளுக்கு தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பிற்காக 1300 போலீஸார் மாநகர் காவல் ஆணையர் நரேந்திர நாயர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

மேலும் அவனியாபுரம் நகர் முழுவதும் CCTV கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

பதட்டம் ஏற்படகூடிய இடங்களில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

மதுரை மாநகராட்சி மருத்து அலுவலர் Dr. வினோத்குமார் தலைமையில் 30 மருத்துவர்கள் 64 செவிலியர்கள், உதவி பணியாளர்கள் கொண்ட குழுவினர். மாடுபிடி வீரர்கள் பரிசோதனை, மற்றும் மாடுபிடி வீரர்கள், மற்றும் பொதுமக்களுக்கு மாடுகளால் ஏற்படும் காயங்களுக்கு முதலுதவி சிகிட்சை வழங்க ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தற்காலிக முதலுதவி மையம் தயார்நிலையில் உள்ளது.

பலத்த காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிட்சையளிக்க
மேலும் 12 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார்நிலையில் உள்ளது.

இதே போல் மாடுகளுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் கால்நடை அம்மா ஆம்புலன்ஸ் 2 தயார்நிலையில் உள்ளது.

இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் கோபாலகிருஷ்ணன் தலைமையில் முதலுதவி மையம் ஏற்படுத்தப்பட்ட 10 பேர் கொண்ட குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!