
வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்க கூடாது.. ராமநாதபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!
கல்வி வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க வேண்டும்-வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுகு ஆதார் அட்டை, குடும்ப அட்டை வழங்க கூட்டது என தாய் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தாய் தமிழர் கட்சி கட்சி சார்பில் மாநிலத் தலைவர் பி எம் பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது- இதில் தமிழகத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு கல்வி வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுத்து முழுமையாக தமிழர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும் பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு அரசு ஆதாரம் அட்டை குடும்ப அட்டை ஆகியவைகள் வழங்க கூடாது.
தமிழர்களின் திறமைகளை அங்கீகரிக்க வேண்டும். எஸ் ஐ ஆர் திட்டம் உள்நோக்கத்துடன் செயல்படக் கூடியது வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் உள் அனுமதிச்சீட்டு வழங்குவதை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு பகுதியில் கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பொதுச்செயலாளர் செல்வம் அமைப்பு செயலாளர் முனியசாமி இளைஞரணி மாநில செயலாளர் ஹரிஹரசுதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.