பரபரப்பு: தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் வாக்கு சேகரிக்க வந்த திமுக MLA – வை விரட்டியடித்த பொதுமக்கள்!

தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் வாக்கு சேகரிக்க வந்த திமுக MLA – வை விரட்டியடித்த பொதுமக்கள்!

ராஜபாளையம் தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஸ்ரீ ராணி குமாரை ஆதரித்து வாக்கு சேகரிக்க வந்த எம் எல் ஏ தங்கபாண்டியனை வார்டுக்குள் விடாமல் அப்பகுதி பொதுமக்கள் விரட்டி அடித்தனர்.

தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியான ராஜபாளையத்தில் திமுக சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக ஸ்ரீ ராணி குமார் அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்காக வாக்கு சேகரிக்கும் பணியில் திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியன் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த இரண்டு நாட்களாக ராஜபாளையம் ஒன்றிய பகுதிகளான சேத்தூர் தளவாய்புரம் செட்டியார்பட்டி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் நேற்று மாலை ராஜபாளையம் நகர் பகுதியான பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள 14 வது வார்டு திருவள்ளுவர் தெருவில் வாக்கு சேகரிக்க வந்த நிலையில் .

அப்பகுதி பொதுமக்கள் பழைய பேருந்து நிலையம் அருகே சாலை வசதி மோசமாக உள்ளது மேலும் தங்கள் வார்டு பகுதிக்குள் எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை எனக்கூறி 14 ஆவது வார்டு பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த எம்எல்ஏவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் சூழ்நிலையை சமாளிக்கும் நோக்கத்தில் 14வது வார்டு கவுன்சிலர் அர்ச்சனா வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சட்டமன்றம் மற்றும் நகர் மன்ற நிதியிலிருந்து எந்த ஒரு பணியும் வார்டுக்குள் நடைபெறவில்லை எனக் கூறி பொதுமக்கள் மேலும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் .

வாக்கு சேகரிக்க வந்த ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் செய்வதறியாது திகைத்து வாக்கு சேகரிக்கும் பணியை கைவிட்டு அப்பகுதியை விட்டு வெளியேறினார்.

ராஜபாளையத்தில் சட்டமன்ற உறுப்பினர் நகர்மன்ற உறுப்பினர் மற்றும் 42 வார்டுகளில் 39 திமுக கவுன்சிலர்கள் என ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் திமுகவினர் வெற்றி பெற்று பணியாற்றி வந்த நிலையில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை எனக் கூறி வாக்கு சேகரிக்க வந்த எம்எல்ஏவிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விரட்டி அடித்தது ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம்

தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஸ்ரீ ராணி குமாரை ஆதரித்து வாக்கு சேகரிக்க வந்த எம் எல் ஏ தங்கபாண்டியனை வார்டுக்குள் விடாமல் அப்பகுதி பொதுமக்கள் விரட்டி அடித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!