Growing support… சீமானுக்கு ஆதரவாக களமிறங்கிய இந்து அமைப்பினர்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பின்னர் நடவடிக்கை வேண்டாம் என தெரிவித்து விட்டு சென்ற நிலையில் கடந்த மாதம் மீண்டும் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் பெறப்பட்டு நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இதையடுத்து, வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு தனது வழக்கறிஞர்களுடன் சென்ற நடிகை விஜயலட்சுமி, சீமான் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக எழுத்துப்பூர்வமான கடிதத்தை அளித்தார்.

இந்த நிலையில், போலீஸின் அழைப்பாணையை ஏற்று சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக சீமான் இன்று ஆஜரானார். அவரது மனைவி, வழக்கறிஞர்கள் உள்பட 5 பேர் மட்டுமே காவல் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். சீமானுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் கூடிய நிலையில், அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதனை அடுத்து தமிழர் முன்னேற்ற படை என்ற கட்சியின் தலைவராக அறியப்படுகின்ற திருமதி. கி.வீரலட்சுமி அவர்கள் சில காலமாக பொதுவெளியிலும் முகநூல் தளத்திலும் சில அரசியல் தலைவர்களையும் அரசியல் கட்சிகளையும் குறிவைத்து ஆபாசமாக பேசுவதும் சமூக
ஒற்றுமையை கெடுக்கும் விதமாகவும் சாதி கலவரத்தை உண்டாக்குவதுமாக செயல்பட்டு வருகிறார்.

நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக செயல்படுகிறேன் என்ற கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களை ஆபாசமாக பேசி சாதி ரீதியாகவும் கொலைமிரட்டல் விடுத்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆணுறுப்பை அறுப்பேன் என முகநூல் பதிவிட்டுள்ளார். ஊடகபேட்டியிலும் நான் பிறப்பிலேயே
ரௌடி, ரௌடி தனம் என் இரத்தத்தில் கலந்துள்ளது எனவும் என் மாமனார் சௌகார்பேட்டையில் பெரிய ஆள் ஸ்கெட்ச் போட்டு தூக்கிவிடுவேன் எனவும் சீமான் வடதமிழகத்தில் கால் வைக்க முடியாது என் தம்பிகளை படை திரட்டி இறக்கட்டுமா?

நீயா நானா பார்த்துக் கொள்ளலாம். நான் 1000 பேரை இறக்குவேன் என பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுக்கிறார்.


நான் சாதி மறுப்பாளர் என்று கூறி விட்டு நான் ஒரு வன்னிய குலசத்திரியர் என குறிப்பிட்ட சாதியை முன்நிறுத்தி சாதி வன்முறையை தூண்டும் விதமாகவும் பேசி செயல்பட்டு வருகிறார்.

திருவள்ளூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் கட்டப் பஞ்சாயத்து செய்கிறார் என்று பொதுமக்களிடமிருந்து சில விமர்சனங்களும் உள்ளது.
இவர் ஏற்கனவே நடிகர் திரு. விஜய் அவர்களை பற்றி அவதூறாக பேசி அவரை மிரட்டல் விடுக்கும் விதமாக காணொளிகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே இதுபோன்று அரசியல் நாகரீகமில்லாமல் பொதுமக்களுக்கும் பொதுஅமைதிக்கும்
குந்தகம் விளைவிக்கும் விதமாக அதே நேரத்தில் அரசியல் தலைவர்களுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விளைவிக்கும் திருமதி. கி.வீரலட்சுமி தமிழர் முன்னேற்றப்படை அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து உடனே கைது செய்து பொது அமைதியையும் அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பும் அளிக்க கோரி கேட்டுக் கொள்கிறோம். என சென்னை காவல் ஆணையரிடம் அகில் பாரத் இந்து மகா சபா அமைப்பின் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!