
சீமானின் ப்ளஸ் பாய்ன்ட் இதுதான்! -பாஜக மாநில தலைவர் அண்ணாமலைபேட்டி!
அரசியலில் முக்கியமாக இளம் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் தாக்குதல் வார்த்தைகளை பயன்படுத்தாமல், மக்கள் நலன் சார்ந்த மற்றும் பொதுவான கருத்துக்கள் அடிப்படையில் இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என இளம் வாக்காளர்கள் மற்றும் நடுநிலையான பொதுமக்கள் விரும்புகின்றனர்.
தமிழ்நாட்டில் இன்றைய இளைஞர்கள் ஆழ்ந்த உணர்வுகளுடன் அரசியலை உற்று நோக்கி நகர்கின்றனர் என, பிரபல யூடியூப் -க்கு அளித்த பேட்டியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
மேலும் அண்ணாமலை அளித்த அந்த பேட்டியில் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து கூறியதாவது: தமிழ்நாடு மாநில அரசியலில் சீமானின் பெரிய ப்ளஸ் அவரின் நேர்மை ஆகும்,
எனவேதான் இளைஞர்கள் சீமான் அண்ணனை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர். மேலும் நாம் தமிழர் கட்சி தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடுவதும் மற்றும் வாக்குக்கு பணம் கொடுக்காமல் நா. த. க. தேர்தல் களத்தில் செயல் படுகின்றனர் – இது சீமான் மீது இளைஞர்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பு ஏற்படுகிறது என அந்த சிறப்பு பேட்டியில் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.