
திருப்பரங்குன்றத்தில் ஆதரவற்றோருக்கு தீபாவளி பரிசு… குவியும் பாராட்டுகள்.!
தீபாவளி எனும் தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற ஒரு பண்டிகையாகும். இது இந்து, சீக்கியம், சைனம் மற்றும் பௌத்தம் மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது.
மதுரை திருப்பரங்குன்றத்தில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு, லயன் S.A. இராஜசேகர் தலைமையில் திருநகர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் N.துரைப்பாண்டி அவர்கள் 19.10.2025 இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரிசி, உணவுப் பொருட்கள் மற்றும் இனிப்புகள் ஆகியவற்றை தீபாவளி பரிசாக வழங்கினார். இந்நிகழ்வில் இருநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்றோர்கள் பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் வெகு விமர்சையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தங்கள் குடும்பத்தினருக்கும், தங்கள் நிறுவன தொழிலாளர்களுக்கும் புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் மற்றும் மானியம் – போனஸ் வாரி வழங்குவது வழக்கம், ஆனால் தன்னைப்போலும் தனது குடும்பத்தை போலும் ஆதரவற்ற, நலிவுற்றேர்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ வேண்டுமென்ற சமூக அக்கறையோடு லயன்ஸ் கிளப் துணையோடு காவல்துறை ஆய்வாளர் ஆதரவற்றோர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கியது இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருவது மட்டுமில்லாமல் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
நன்றி:- போட்டோ கார்த்தி – திருப்பரங்குன்றம்
த
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.