அகற்றப்பட்ட பயணிகள் நிழற்குடை அமைக்க… நாம் தமிழர் கட்சியினர் மனு!

அகற்றப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க வேண்டி…நாம் தமிழர் கட்சியினர் மனு!

 மதுரை மாநகராட்சி மண்டலம் எண் -1க்கு மாநகராட்சி வார்டு எண் -2க்கு உட்பட்ட கூடல் நகர் மேம்பாலம் முதல் அலங்காநல்லூர் பிரதான சாலையில் அமைந்துள்ள கோயில் பாப்பாக்குடி ஊராட்சிக்கு கட்டுப்பட்ட சிக்கந்தார்சாவடி வரையில் மாநகராட்சி வார்டு எண் 2க்கு உட்பட்ட பகுதிகள்

1) சாந்தி நகர் கிழக்கு

2)சாந்தி நகர் மேற்கு

3)அஞ்சல் நகர் மேற்கு

4) அஞ்சல் நகர் கிழக்கு

5)வானொலி நிலையம் மேற்கு

6) வானொலி நிலையம் கிழக்கு

7) கூடல் நகர் கிழக்கு

கோவில் பாப்பாக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகள்

1) இபி ஸ்டாப் மேற்கு

2) சிக்கந்தர் சாவடி கிழக்கு

ஆக மொத்தம் 9 பேருந்து நிறுத்தங்கள் எங்கள் பகுதியில் உள்ளது. 

கடந்த ஆறு மாதங்களுக்கு முன் சாலை விரிவாக்க பணிகளுக்காக மேற்படி ஒன்பது பேருந்து நிறுத்தங்களில் இருந்த பேருந்து நிறுத்த நிழல் குடைகள் அனைத்தும் அகற்றப்பட்டது. சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று முடிந்த பின்னும் தற்போது வரை மேற்கண்ட பேருந்து நிறுத்தங்களில் நிழல் குடைகள் மாநகராட்சி சார்பிலும் ஊராட்சி சார்பிலும் அமைக்கப்படவில்லை. மேற்படி எங்கள் பகுதியானது உழைக்கும் ஏழை எளிய தினக்கூலிகள் வசிக்கும் பகுதியாகும்.

எங்கள் பகுதியில் வசிக்கும் பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவ மாணவியர்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் இளைஞர்கள் முதியவர்கள் மேற்படி அரசின் போக்குவரத்தை பெரிதும் பயன்படுத்துகிறார்கள். நிழல் குடை இல்லாத காரணத்தினால் சாலையின் ஓரமாக வெயிலிலும் மழையிலும் நிற்க வேண்டிய சூழல் உள்ளது.

பேருந்தில் பயணிக்கும் மக்கள் தங்களது உடைமைகளை நிழல் குடை இல்லாத காரணத்தினால் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியவில்லை. எனவே மேல் குறிப்பிட்ட பகுதிகளில் உடனடியாக தற்காலிகமாகவும் அல்லது நிரந்தர நிழல் குடை அமைத்துத் தந்து பொதுமக்களுக்கு பயன்தரும் வகையில் நடவடிக்கை எடுத்து நிழல் குடை உடனடியாக அமைத்து தர வேண்டும் என  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட விளாங்குடி பகுதி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் ஜான்சன் என்பவர் மனு அளித்துள்ளார். இதில் அக்கட்சியின் மேற்கு தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் விக்னேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் அருண் ஜெயசீலன், காசி மாயன், மருதமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!