
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் விஜயகாந்தின் படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.
உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவை ஒட்டி பல்வேறு கட்சி தலைவர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் மதுரை திருமங்கலம் அருகே உச்சப்பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒன்றிணைந்து விஜயகாந்த் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மெழுகுவத்தி ஏந்தி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
மேலும்., உயிரிழந்த விஜயகாந்த் குறித்த செய்தியறிந்த நேரம் முதல் இங்கு உள்ள ஈழத் தமிழர்கள் அனைவரும் பெரும் சோகத்தில் இருப்பதாகவும்., ஈழத் தமிழர்கள் பாதிக்கப்பட்ட போது தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடாமல் புறக்கணித்ததும், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை தவிர்த்து ஈழத் தமிழர்களுக்காக பல்வேறு உதவிகளை வழங்கிய நல்லுள்ளம் படைத்தவர்.
அவர் மறைந்தது தங்களுக்கு மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அனைத்து முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களையும் மற்றும் இலங்கையில் வாழும் தமிழர்களையும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும்., அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.