அரசியல் வரலாற்றில் ஓர் புதிய புரட்சி… மதுரையில் முதன்முறையாக டிஜிட்டல் அரசியல் மாநாடு… பல்வேறு அரசியல கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு!
மதுரையும் அரசியலும் பிரிக்க முடியாததாகவே இருக்கிறது. தேசிய அரசியலாக இருக்கட்டும்…மாநில அரசியலாக இருக்கட்டும்… இரண்டிலுமே மதுரை மண்ணின் வாசம் இருக்கத்தான் செய்கிறது. இன்றளவும் அது தொடர்கிறது.
மதுரையும் அரசியலும்:
மகாத்மா காந்தி தொடங்கி, அண்ணாயிஸத்தை அறிவித்த எம்.ஜி.ஆரைக் கடந்து, மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் வரை மதுரையுடன் அரசியல் தொடர்பை ஏற்படுத்தி மதுரை அரசியல் வரலாற்றின் பக்கங்களைக் கூட்டிக் கொண்டே செல்கின்றனர்.
அது ஏன் மதுரை மட்டும்?
வேறு எந்த நகருக்கும் இல்லாத அளவுக்கு மதுரைக்கு மட்டும் ஏன் இத்தகைய சிறப்பு என அரிய முற்பட்டபோது சில சுவாரஸ்யத் தகவல்கள் கிடைத்தன.அரசர் காலத்திலிருந்து இதனைத் தொடங்குவோம். பாண்டிய மன்னர்களின் தலைநகராக மதுரை இருந்தது. தலைநகரம் என்றால் அதில் சிறப்பான கட்டமைப்பு இருக்க வேண்டும். அதன் நிமித்தமாகவே அனைத்து தொழில் சமூகத்தினரும் மதுரை நகரில் குடியேறினர். சிலர் மன்னர்களால் குடியேற்றப்பட்டனர். வெளியூர்களில் இருந்துகூட கைவினைக் கலைஞர்கள் குடியமர்த்தப்பட்டனர்.
இப்படியாக பாண்டிய மன்னர்கள் காலம் தொடங்கி, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த காலம் தொட்டு, நாடகம், சினிமா என மாறிய காலம் வரை அரசியல் விழிப்புணர்வு மதுரை மக்களுக்கு எக்காலமும் கிட்டிக்கொண்டே இருந்ததாலோ என்னவோ மதுரையும் அரசியலும் பிரிக்க முடியாததாகவே இருக்கிறது.
அந்த வகையில் மதுரையில் இன்று முதல்முறையாக டிஜிட்டல் அரசியல் மாநாடு நடைபெற்றது. டிஜிட்டா மேட்டிக்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த இந்த கருத்தரங்கில் மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன்., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தகவல் தொழில் நுட்ப நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
டிஜிட்டல் அரசியல் மாநாட்டை தமிழ்நாடு சேம்பர் பவுண்டேசன் தலைவர் எஸ்.ரத்தினவேலு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக சு.வெங்கடேசன் எம்.பி., (இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்) டாக்டர் பி.சரவணன் (அதிமுக), பேராசிரியர் ராம சீனிவாசன் (பாஜக), அனந்தன் அய்யாசாமி (பாஜக), மரிய ஜெனிபர் தீபக், சாட்டை துரைமுருகன் (நாம் தமிழர் கட்சி) உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த தகவல் தொழில் நூட்ப நிர்வாகிகள் பங்கேற்று பேசினர். இந்த மாநாட்டில் அரசியலில் டிஜிட்டலின் பங்கு குறித்து பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டன.
இந்த கருத்தரங்கு குறித்து டிஜிட்டாமேட்டிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜே.கே.முத்து கூறுகையில், வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் அரசியலுக்கும் அத்தியாவசியம் ஆகி விட்டது. தொழில்நுட்பத்தை எவ்வாறு அரசியலுக்கு பயன்படுத்துவது? அதன் பயன்கள் என்ன? என்பது குறித்து டிஜிட்டல் அரசியல் மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இதில் மாநில மற்றும் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள், பல்வேறு கட்சிகளின் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றது கூடுதல் சிறப்பம்சமாகும், என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
நாம் தமிழர் கட்சி யை உலகில் உள்ள அனைத்து பகுதிக்கும் பரப்பவேண்டும் இதன் மூலம் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி