திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை திருவிழாவை  முன்னிட்டு “மகாதீபம்” ஏற்றப்பட்டது.

3 அடி உயர செப்பு கொப்பரையில் 300 லிட்டர் நெய், 150 மீட்டர் காடா துணி, 5 கிலோ கற்பூரம் ஆகியவை கொண்டு “மகா தீபம்” தயார்.

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவில் கார்த்திகை தீப திருவிழா 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 தினசரி காலை மாலை இருவேளைகளிலும் சுப்பிரமணியசாமி தெய்வானையுடன் வீதி உலா வந்தனர். 

நேற்று மாலை சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று நாளை காலை 11.30 மணிக்கு தேரோட்டமும், மாலை 6:00 மணிக்கு திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள உச்சி பிள்ளையார் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்ற தயார் நிலை நிலையில் உள்ளது.

.  சிறிய வைரத்தேர் காலை நான்கு ரதவீதிகளில் வலம் வந்தது.  

‘ மாலை கோயிலில் 6 மணிக்கு பரணி தீபம் ஏற்றிய பின்பு மலைமேல் கார்த்திகை மகா தீபம் திருக்கோயில் துணை ஆணையர் சுரேஷ் முன்னிலையில்  கோயில் அர்ச்சகர்கள் “மகா தீபம்” ஏற்றினர்.

மதுரை மாநகர் காவல் ஆணையர் செந்தில் குமார் , துணை ஆணையர் சீனிவாச பெருமாள் மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 மகா தீபம் தயார் செய்ய 3 அடி உயரமுள்ள செப்பு கொப்பரையில் 150 மீட்டர் காடா துணி, 300 லிட்டர் நெய், 5 கிலோ கற்பூரம் கொண்டு ” மகாதீபம்” ஏற்றி உள்ளனர். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!