விவசாய நிலங்களை அபகரிக்கும் அதிகாரிகள்… அதிரடியாக களமிறங்கும் சீமான்…! என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்? எதிர்பார்ப்பில் மக்கள்.

பல வருடங்களுக்குமேலாக விவசாயம் செய்து வரும் நிலத்தை காயப்படுத்துவதை தடுக்க கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து மனு அளித்த விவசாயிகள்

இன்று 15-10-2022 திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தெற்கு ஒன்றியம் தோப்பூர் ஊராட்சியில் 10 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களை தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியின் விரிவாக்க பணிக்காகவும், பாரப்பட்டி ஊராட்சியில் நூறு ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் சுமார் 200 விவசாய குடும்பங்களுக்கு சொந்தமான 400 ஏக்கர் விவசாய நிலத்தை சென்னையைச் சேர்ந்த தனிநபரால் ஆட்சி அதிகாரங்களில் துணையோடு கடந்த 15 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

கண்ணீர் மல்க விவசாயிகள் கடிதம்..மேலும் படிக்க …

சொந்த நிலத்தின் மக்கள் அவர்களது நிலத்தை கோரி கடந்த ஐந்து ஆண்டுகளாக பலவித போராட்டங்களை முன்னெடுத்து ஒன்றும் செய்ய முடியாத நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களிடம் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் அவர்களின் வழிகாட்டுதலின் படி திருப்பரங்குன்றம் தொகுதி செயலாளர் மருதமுத்து மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர் வை.சிவா மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியான பாரப்பட்டி கருப்பசாமி மற்றும் தோப்பூர் சிவனாண்டி இந்த பிரச்சினைக்கான தகுந்த ஆவணங்களை வழங்கி தனி முதலாளிக்கு தாரைவாார்க்க துணை போகும் மாவட்ட பதிவாளர் அவர்களின் செயலை கண்டிக்கக் கோரியம் கையகப்படுத்த நினைக்கும் நிலத்தினை மீட்டுத் தரக்கூடியும் கோரிக்கை வைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!