அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் சிறப்பு வாய்ந்த பங்குனி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 15 நாட்கள் கொண்டாடப்படும் பங்குனி பெருவிழாவின் முக்கிய விழாவான முருகன் தெய்வானை திருக்கல்யாணம் மதுரை மீனாட்சி மற்றும் சொக்கநாதர் முன்னிலையில் நடைபெறும்
தைப்பூசம், கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் உட்பட 12 மாதமும் திருவிழா நடைபெறுவது இக்கோயிலில்தான்.
15 நாட்கள் திருவிழா திருப்பரங்குன்றத்தில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கும். இந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக
மார்ச் 18-ம்தேதி பங்குனி உத்திரமும்,
மார்ச் 20-ம் தேதி பட்டாபிஷேகமும்,
மார்ச் 21-ம் தேதி திருக்கல்யாணமும்,
மார்ச் 22-ம் தேதி தேரோட்டமும்,
மார்ச் 23-ம் தேதி தீர்த்த உற்சவமும் நடைபெறுகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முருகன் தெய்வானை உடன் மணக்கோலத்தில் காட்சியளிக்கும் ஒரே தலம் முதற்படை வீடான திருப்பரங்குன்றம்தான். முருகன் தெய்வானை திருக்கல்யாணம் பங்குனி விழாவில் 12ஆம் நாள் நடைபெறுகிறது. முருகன் தெய்வானை திருமணத்தில் பங்கேற்க மதுரையில் இருந்து மீனாட்சியம்மன், பிரியாவிடையுடன் சுந்தரரேசுவரர் பங்கேற்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மகனின் திருமணத்திற்காக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் வருவதால் அன்றைய தினம் மாலை வரை கோவில் நடை அடைக்கப்படும். திருக்கல்யாணத்திற்காக அழகர் மலையில் அமைந்துள்ள பழமுதிர்ச்சோலைசோலைமலை முருகப்பெருமான் கோவிலில் இருந்து திருக்கல்யாண சீர்வரிசை கொண்டு வரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.