திருவண்ணாமலை மகாரத தேரோட்டம்… லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்…

திருவண்ணாமலை மகாரத தேரோட்டம்… லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்…

இன்று திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 7ம் நாள் உற்சவத்தையொட்டி, மாட வீதிகளில் மகாரத தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

மகாரத தேரோட்டத்தை முன்னிட்டு காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். வெளிமாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலையில் குழுமியுள்ளனர்.

பக்தர்களின் கூட்டத்தால் திக்குமுக்காடி வருகிறது திருவண்ணாமலை. திருவண்ணாமலையில் இன்று தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு மாட வீதியில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மாட வீதிகளை நோக்கி செல்லக்கூடிய வீதிகளின் வழியாக செல்லவும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை மகாதீபத்தை முன்னிட்டு சுமார் 16,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டிசம்பர் 13ம் தேதி காலை கோயிலில் பரணி தீபமும், அன்றைய தினம் மாலையில் மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. பல்வேறு மாவட்ட, மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். திருவண்ணாமலை செய்தியாளர் -நேதாஜி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!