
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா.. பக்தர்களே இதெல்லாம் செய்யாதீங்க!
திருவண்ணாமலை கார்த்திகை மகா தீப திருவிழாவையொட்டி, கிரிவலம் தொடர்பாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை காவல் துறை வெளியிட்டுள்ளது.

- திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்குதல், ஆசிர்வதித்தில் என்ற போர்வையில் ஏமாற்றியும், மிரட்டியும் பணம் வசூலிப்பது, குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் நான்கு கோபுரங்களுக்கு முன்பாகவோ, கிரிவலப்ப்பாதையிலோ கற்பூரம் ஏற்றக்கூடாது.
- கால்நடை உரிமையாளர்கள், கால்நடைகளை கிரிவலப்பாதையில் உலவ விடக்கூடாது .
- உரிய அனுமதியின்றி அன்னதானம் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இடங்களிம் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும்.
- பக்தர்கள் கிரிவல பாதையை ஓட்டியுள்ள நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
- அனுமதியின்றி வனப்பகுதியில் பிரவேசிப்பதும், மலையின் மீது ஏற முயற்சிப்பது குற்றம் . அவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
- கிரிவலபாதையில் கடைகள் அமைத்தோ, தங்கியோ கேஸ் சிலிண்டர் பயன்படுத்தியோ சமையல் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
- இதனிடையே, கார்த்திகை மகா தீபத்தையொட்டி, திருவண்ணாமலையில் 25 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- குறிப்பாக சென்னை, திண்டிவனம், புதுச்சேரி ஆகிய வழித்தடங்களிலிருந்து செஞ்சி, கீழ்பென்னாத்தூர் வழியாக திருவண்ணாமலை வரும் பேருந்துகள், திருவண்ணாமலை மார்கெட் கமிட்டி தற்காலிக பேருந்து நிலையத்தை வந்தடையும். பின்பு அங்கிருந்து புறப்படும்.
- மகாதீபத்திற்கு வரக்கூடிய வாடகை பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளும், தற்காலிக பேருந்து நிலையங்களில் மட்டுமே நிறுத்தப்பட வேண்டும். மீறினால் அவை அப்புறப்படுத்தப்படும்.
- பக்தர்கள், 9363 – 622 – 330 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு ஹலோ என குறுஞ்செய்தி அனுப்பி, தற்காலிக பேருந்து நிலையத்திற்கான கூகுள் மேப்பினை பெறலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.