நாம் தமிழர் கட்சி சார்பாக குடிவாரிக்
கணக்கு எடுக்க வலியுறுத்தி மதுரை பழங்காநத்தம் பகுதியில்
மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் தமிழ் நாட்டில் குடிவாரி கணக்கு
எடுக்க வலியுறுத்தி மதுரை பழங்காநத்ததில் மாபெரும்
பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த குடிவாரி கணக்கெடுப்பு
தமிழ் நாட்டில் நடத்தி 13 வருடங்கள் ஆகின்றன.
தற்போது தமிழ் நாட்டில் மக்கள் தொகையும் கூடி விட்டது. இந்த சூழலுக்கு ஏற்ப
குடிவாரி கணக்கெடுப்பு தற்போது அவசியம்.
இங்கு கடந்த 10 வருடங்களாக
ஆட்சி செய்த அதிமுக குடிவாரி கணக்கை நடைமுறை படுத்தவில்லை.
கொட்டும் மழையில் நடந்த குடிவாரிக் கணக்கெடுப்பு நடத்த கோரிய பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களில் மழை கொட்ட ஆரம்பித்தது கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் குடிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசினார்கள். 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், 3 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததில் ஒருவர் கூட தனது இருக்கையை விட்டு எழுந்து செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் இறுதியாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசத்தொடங்கினார். அப்போது, எப்போதும் நான் பேசும்போது மழை பெய்யும்…ஆனால் இன்று நான் பேச வந்ததும் மழை நின்றுவிட்டது என தனது எழுச்சியுரையை தொடங்கினார் சீமான்…
என் மொழி சார்ந்த எவரும் எங்களை ஆளவில்லை. தமிழினம் பேரன்பிலும், பெருமையிலும் பெரும் தவறு செய்து விட்டது. சமூகநீதியை தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் நாங்கள் கேட்கவில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சேர்த்துதான் கேட்கிறோம்.
தமிழ் சமய கடவுள்களுக்கு மட்டுமே விலங்குகள் உடன் இருக்கும் மற்ற எந்த சமய கடவுள்களுக்கும் விலங்குகள் உடன் இருப்பதில்லை.
மகாராஸ்டிராவில் 75 லட்சம் தமிழர்கள், கர்நாடகாவில் ஒன்னேகால் கோடி தமிழர்கள் இருக்கிறோம் எங்களுக்கு அங்கு என்ன கொடுக்கிறார்கள்.
மோடி பெண்கள் போடும் லெகின்ஸ் பேன்ட் போட்டுக்கொண்டு நாடு நாடா சுற்றிக் கொண்டுவருகிறார்.
கடையில் உள்ள பெயர் பதாகைகளில் தமிழில் எழுத்துக்கள் இல்லை இங்கிலாந்து நாட்டின் இன்னொரு நாடாக தமிழ்நாடு உள்ளது.

சாதி வாரி, மொழி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான் நாம் தமிழரின் கோரிக்கை.
சமூகநீதி பேசுகிற, பெரியார் மண் என பேசும் இவர் எடுக்க மறுப்பது ஏன்? பீகாரில் பெரியார் பற்றியெல்லாம் பேசாத நித்தீஷ்குமார் எடுக்கிறார். எது உண்மையான சமூக நீதி? நீத்திஷ் குமார் எடுக்கிறார் நீங்கள் ஏன் எடுக்க தயங்குவது. எங்களை வஞ்சித்தது தமிழக மக்களுக்கு தெரிந்துவிடும் என்பதற்காக எடுக்க மறுக்கின்றனர்.
தேவேந்திர எவ்வளவு என எண்ணிக்கை நடத்தி பட்டியல் பிரிவிலிருந்து நீக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்டவன் என யாரையாவது சொன்னால் மறைந்த அப்பா மணிவண்ணனின் செருப்பு என்னிடம் உள்ளது அதாலேயே பிச்செரிந்துவிடுவேன்.
ஸ்டாலின் ஒன்றுமே செய்யவில்லை என அண்ணாமலை சொல்கிறார். கடந்த 8 ஆண்டுகளா மோடி என்ன செய்தார்.
ராஜராஜ சோழன் இந்துவா என்ற சர்ச்சை எழுந்துள்ளது ராஜராஜசோழன் ஆண்ட காலத்தில் இந்தியாவும் இல்லை இந்துவும் இல்லை வரலாற்றை படிக்க வேண்டும். அவர் கட்டிய கோயில் சைவக் கோயில் என வரலாற்று குறிப்பில் அவர் சைவ மரபினர் என்று தான் உள்ளது.
எனவே நாங்கள் வீர சைவர்கள் தான் எங்களை மதமாற்றம் செய்ய முயற்சிக்காதீர்கள், வள்ளுவருக்கும் காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள்.
குடிவாரி கணக்கெடுப்பு எடுங்கள் இல்லையென்றால் சமூக நீதி பற்றி பேசுவதை விடுங்கள். யாரையும் ஏமாற்ற மாட்டோம் யாரிடமும் ஏமாற மாட்டோம்.
பீகார் எந்த வழியை பின்பறியதோ அதே போல் இங்கும் குடிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் அதுதான் உண்மையான சமூக நீதியாக இருக்க முடியும்.
இசைஞானி இளையராஜா ஈடு இணையற்ற சாதனை புரிந்த இளையராஜா தலித் அடிப்படை எம்.பி பதவி கொடுக்கப்பட்டதாக செல்கின்றனர்.
அதை இளையராஜா நிராகரித்து இருக்க வேண்டும்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விரைவில் குடிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் அத்தோடு மொழிவாரி கணக்கெடுப்பும் நடத்த வேண்டும் எனவும் நீங்கள் எடுக்கவில்லை என்றால் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்ததும் நானே வந்து எடுப்பேன் என கூறி பொதுக்கூட்டத்தில் தனது எழுச்சியுரையை நிறைவு செய்தார் சீமான்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.