கஞ்சா, கொகேயின் மாதிரியான போதைப்பொருள் பயன்படுத்தி இறந்தால் 10 லட்சம்… கள்ளச்சாரயம் குடித்து உயிரை விட்டவர்களுக்கு நிவாரணம் அறிவித்தது சரியா?
கள்ளச்சாராயம் தடை விதிக்கப்பட்ட பொருளில் ஒன்று. தடையை மீறி குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் நிவாரணம் அரசு தருகிறது. நாளை கஞ்சா, அபின், கொகேயின் மாதிரியான போதைப்பொருள் பயன்படுத்தி இறந்தால் 10 லட்சம் தருமா அரசு? விஷத்தை உண்டால் நஷ்ட ஈடு உண்டு என்ற எண்ணத்தை விதைக்கிறது அரசு.
உழைக்கும் போது இறந்தால் நிவாரண நிதி தருவதி நியாயம். கழிவுநீரில் வேலை செய்யும்போது விஷவாயு தாக்கி இறப்போர்கள் மற்றும் சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்து நேரிட்டால் எம்.எல்.ஏ உட்பட முதலமைச்சர் நேரில் சென்று பார்க்க கூட மாட்டார்கள். அதேபோல் அவர்கள் உழைக்கும் போது விபத்தால் இறந்து போனால் நிவாரணம் தருவதோடு சரி.
ஆனால் இந்த கள்ளச்சாராயம் பலிக்கு முதல்வர் உட்பட பலரும் நேரில் சென்று பார்ப்பது என்பது கேலிக்கூத்தாக உள்ளது. விட்டால் கள்ளச்சாராயத்தால் இறந்தோர் குடும்பத்துக்கு அரசுவேலையும் கொடுத்துவிடுவாார்கள் எனவும் இதற்கு பெயர் தான் திராவிட மாடல் ஆட்சியா எனவும் நெட்டிசன்கள் சூடு பறக்கும் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.