நெல்லையில் நண்பர் போல் பேசி கொள்ளையடித்த மூன்று பேர் அதிரடி கைது: காவல்துறைக்கு குவியும் பாராட்டுகள்..

திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய பகுதியான, ரெட்டியார்பட்டி நான்கு வழிசாலையில் வல்லகுலத்தை சேர்ந்த அந்தோணி என்பவர் ஸ்ரீனிவாச நகரை சேர்ந்த சுரேந்தர் என்பவரிடம் நண்பர் தோணியில் செல்போனில் பேசி தங்களை பார்க்க வேண்டும் என்று. கடந்த 09-09-2020 ம் தேதியன்று, ரெட்டியார்பட்டி நான்கு வழிசாலையில் சந்திக்க வருமாறு அழைத்து, அந்தோணி மற்றும் அவரது நண்பர்களான வள்ளிநாயகம்,முத்துகிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்து, அவரிடமிருந்து ரூ 50,700/- மதிப்புடைய செல்போன், ரூ 700/- மற்றும் ATM Card -ஐ கொள்ளையடித்து சென்றதாக சுரேந்தர் கொடுத்த புகாரின் பேரில், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.ஜெயலட்சுமி அவர்கள் வழக்கு பதிவு செய்து, பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் துரிதமாக செயல்பட்டு, 15-09-2020 ம் தேதியன்று குற்ற செயலில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ 50,700/- மதிப்புடைய செல்போன், ரூ 700/- மற்றும் ATM Card -ஐ கைப்பற்றி, சிறையில் அடைத்தார்கள். காவல்துறை துரிதமாக செயல்பட்டு கெள்ளையர்களை பிடித்ததால் பாளையங்கோட்டை காவல்துறையினருக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

Leave a Reply

error: Content is protected !!