விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் அமைந்துள்ள வெற்றி விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் கலந்து கொண்டு வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வேண்டும் என சிறப்பு பிரார்த்தனை செய்தார். உடன் மாவட்ட கவுன்சிலர், கிழக்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன் , வெம்பக்கோட்டை . ஒன்றிய செயலாளர் மணிகண்டன், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் முருகபூபதி, ஒன்றிய கழக பொருளாளர் சுப்பையா துறை மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.