ராமநாதபுரம் நகர் மறவர் சங்க சமுதாய கூடத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
“பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா” திட்டத்துடன் இணைந்த முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை ராமநாதபுரம் அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் பொதுமக்களுக்கு மருந்து,மாத்திரைகள் வழங்கியும் மற்றும் கொரோனா தொற்று பரவல் சம்மந்தமான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்படன.
இந்நிகழ்ச்சியில் அதிமுக வட்ட கழக செயலாளர் தர்மலிங்கம்,மாணவரணி துணை செயலாளர் சேதுபதி,சத்தீஸ்வரன் உட்பட இளைஞர்கள் பல பங்கேற்றனர்.
இது போன்ற செய்திகளைஉடனுக்குடன் பெற கீழே உள்ள படத்தை கிளிக் செய்து வாட்ஸ்அப் குழுவில் இணையவும்.