கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியில் சொத்துக்கு ஆசைப்பட்டு வயது 51வயது முதிர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த 26 வயது இளைஞர் திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் அவமானம் ஏற்பட்டதால் வயது முதிர்ந்த மனைவியை கொலை செய்ததாக வாக்குமூலம்.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளை அருகே காரகோணம் சகா 51 வயது வயது முதிர்ந்த பெண் இவர் அந்த பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவருக்கு சுமார் பத்து ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவருக்கு வயது முதிர்ந்த பிறகும் திருமணம் ஆக வில்லை. இந்த நிலையில் நெய்யாற்றாங்கரை அருகே பத்தாங்கல் பகுதியை சேர்ந்த அருண் 26 வயது தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியாற்றி வருகிறார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. காதலிக்கும் பெண்ணிற்கு வயது முதிர்ச்சியை தெரிந்தும் காதல் மற்றும் திருமண ஆசை வர காரணம் சாகா என்ற அந்த வயது முதிர்ந்த பெண்ணிற்கு பத்து ஏக்கர் விவசாய நிலம் மற்றும் அழகு நிலையம் மூலமாக அதிக வருமானம் இருப்பதால் பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த பெண்ணை இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் வைத்து இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்திற்கு அருணின் குடும்பத்தாருக்கு விருப்பம் இருந்ததால் தாய் தந்தையினர் திருமணத்தில் பங்கேற்க வில்லை. திருமணத்திற்கு பிறகு வீட்டோடு மாப்பிள்ளையாக காரகோணம் பகுதியில் உள்ள சகாவின் வீட்டில் வாழ்ந்து வந்தார். சகாவின் வீட்டில் அவரின் முதிர்ச்சி அடைந்த தாயார் படுக்கையில் உள்ளார். அவருக்கு உதவுவதற்காக ஹோம் நர்ஸ் ஒருவரும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சகா தங்களது திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் அவரின் நண்பர்களுக்கும் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவ்வப்போது இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மின்சார அடுப்பு மூலம் மின்சாரம் பாய வைத்து கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று சாகா மின்சாரம் பாய்ந்து இறந்த நிலையில் கிடந்ததை தொடர்ந்து கணவன் அருண் அக்கம் பக்கத்தினரிடம் கூறினார். சந்தேகம் அடைந்த ஊர்மக்கள் கேரள மாநிலம் வெள்ளறடை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விட்டு அருணை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மனைவி வெளியிட்ட புகைப்படம் மூலம் இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம் அனைவருக்கும் தெரிய வந்ததாலும் பல நண்பர்கள் கேலி செய்ததாலும்,
ஏற்பட்ட ஆத்திரத்தில் வயது முதிர்ந்த மனைவியின் மீது மின்சார வயரை சுற்றி மின்சாரம் பாய வைத்து கொலை செய்த பிறகு மின்சாரம் தாக்கியதில் இறந்ததாக நாடகம் ஆடியதை ஒப்பு கொண்டு உள்ளான் சொத்திற்கு ஆசைப்பட்டு வயது முதிர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொலை செய்த சம்பவம் தமிழக கேரள எல்லை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.