மதுரை: வேளாண் சட்டத்தை எதிர்த்து கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து மதுரை நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்ட உரை – வீடியோ

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

போராடி வரும் விவசாய பெருங்குடி மக்களுக்கு ஆதரவாகவும் மற்றும் வேளாண் திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெறக் கோரி இன்று காலை மதுரை மாவட்டம் செக்காணூரணி பேருந்து நிலையம் அருகே கண்டன ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்
செ. வெற்றிக்குமரன் அவர்களின் தலைமயில், மண்டல செயலாளர் செங்கண்ணன் அவர்களின் முன்னிலையில் மதுரை மேற்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரான செ.வெற்றிக்குமரன் அவர்கள் கண்டன உரையாற்றி பேசியபோது,

நாடு முழுவதும் விவசாயிகளாள் உற்பத்தி செய்யக்கூடிய பொருளை ஒன்றரை மடங்கு விலை கொடுத்து அரசு வாங்கிக்கொள்ளும் என பாஜக கட்சி வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், பாரதிய ஜனதா கட்சி ஒரு சீட்டிங் கட்சி எனவும், நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்தவுடன் வேளாண் சட்டத்தை தூக்கி எறிவோம் எனவும் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆடு, மாடு மேய்த்தல் மற்றும் விவசாயம் அரசு பணியாக்கப்படும் என்றும் கூறினார்.

அதானி,அம்பானிக்கு மட்டும் தான் மோடி அரசு செயல்படுகிறது, ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்த கதையாயிற்று என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இயற்கை விவசாயி பாண்டித்துரை கூறினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் பலரும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

மேலும் இது போன்ற செய்திகைளை உடனுக்குடன் பெற கீழே உள்ள கட்டத்தை க்ளிக் செய்து வாட்ஸ்அப் குழுவில் இணையவும்.

whatsapp group link

Leave a Reply

error: Content is protected !!