மதுரை:தொடர் மழையால் நெற்பயிர்கள் சேதம்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம், ஒரே கிராமத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் பயிர்கள் பாதிப்பு நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தாள் நஷ்டங்களை ஓரளவு குறைக்கலாம் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை.

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் இரும்பாடி, கருப்பட்டி,நாச்சிகுளம், மேல் நாச்சிகுளம், பொம்மன்பட்டி,அமைச்சியாபுறம், தென்கரை, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், குருவித்துறை உட்பட இப்பகுதி கிராமங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது நெல் அறுவடை செய்யக்கூடிய தருணத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல் கதிர்கள் நிலத்தில் சாய்ந்து நெல்கள் முளைத்து வருகின்றது. இதனால் 2000 ஏக்கருக்கு மேல் நெற்க்கதிர்கள் மழை நீரில் நனைந்து விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

சேதமான நெற்பயிர்கள்

இதுகுறித்து மேல் நாச்சிகுளம் விவசாயி பாஸ்கரன் கூறும்போது நாங்கள் தொன்றுதொட்டு விவசாயம் செய்து வருகிறோம்.எங்கள் பகுதியில் இரண்டு போகம் விவசாயம் நடைபெறும் தற்போது ஒரு போகம் விவசாயத்திற்கு தான் தண்ணீர் கிடைக்கிறது ஏனென்றால் அணையில் இருந்து தண்ணீர் குடிநீருக்காக பல கிராமங்களுக்கு எடுத்துச் செல்வதால் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் ஒரு போகம் ஆக குறைந்துவிட்டது மேலும் ஒரு போகத்திற்கு மட்டுமே தண்ணீர் பொதுப்பணித்துறையினர் வழங்கி வருகின்றனர்.
ஒரு போகத்திற்கு ஏக்கருக்கு சுமார் 30 ஆயிரம் செலவழித்து விவசாயம் செய்துள்ளோம் ஒரு வாரத்தில் நெல் அறுவடை செய்யத் தயாராக இருந்த நெற்கதிர்கள் தொடர்ந்து பெய்த மழையால் நெற்கதிர்கள் நிலத்தில் சாய்ந்து மண்ணோடு மண்ணாக முளைத்துவிட்டது. அரசு அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினரும் இதுவரை எங்கள் பகுதிகளில் சேதங்களை வந்து பார்வையிடவும் இல்லை விவசாயிகளுக்கு ஆறுதல் கூறவும் இல்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

மேலும் புதிய வேளாண் சட்டங்களால் தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதை தவிர்த்து வருகிறது. ஆகையால் மழையில் நனைந்த நெல் கதிர்களை அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருகிறோம் கொள்முதல் நிலையங்கள் இருந்தாலும் செலவுத் தொகையில் பாதியாவது கொள்முதல் நிலையம் மூலமாக எடுத்துச் செல்வார்கள் ஆகையால்
அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

error: Content is protected !!