மதுரையில் இறப்புச் சான்றிதழ் நகல் பெற 2,000 ரூபாய் லஞ்சம் கேட்பதாக புகார் : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ..!!

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட சம்மட்டிபுரம் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் பணியாற்றும் கோபால் என்பவரின் முன்னிலையில் அங்கு ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டுவரும் ஹெலன் மேரி என்பவர் இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு சுமார் தலா 200 வீதம் 10 சான்றிதழுக்கு 2,000 லஞ்சம் கேட்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது, மேலும் பிறப்பு இறப்பு சான்றிதழ் வாங்கி தருவதாக அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெரும் சம்பவங்கள் அதிகரிப்பதாக இறப்பு பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கு ஆன்லைக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் பணியில் உள்ள ஊழியர்கள் லஞ்சம் கேட்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

மேலும் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து மாநகராட்சி ஆணையாளர் உரிய விசாரணை நடத்தி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

error: Content is protected !!