கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் திருட்டு போன 100 சவரன் நகைகள் மீட்பு. நகைக்கு உரியவர்களிடம் குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல பகுதிகளில் திருட்டு போன, நகைகள், செல்போன்கள் குறித்த புகாரின் அடிப்படையில், இணைய குற்றப்பிரிவு குழுவினரால் 112 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதேபோல் கடந்த ஆண்டில் திருட்டு போன 29 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் குமரி மாவட்டத்தில் வழிப்பறி திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பறிபோன நகைகளில் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் மட்டும் 100 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருட்டுப் போய் மீட்கப்பட்ட செல்போன்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் நகைகள் மற்றும் பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.