
கன்னியாகுமரி மாவட்டத்தில் செங்கல் சூளைக்கு மண் எடுக்க அனுமதி கேட்டு ஆரல்வாய்மொழி செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் , வாகன உரிமையாளர்கள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன்புதூர் ,தாழக்குடி , தோவாளை போன்ற பகுதிகளில் செங்கல் சூளைகள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன.
இந்த செங்கல் சூளைகளுக்கு குளங்கள் மற்றும் தனியார் நிலங்களில் இருந்து மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அந்த அனுமதிகளை மாவட்ட நிர்வாகம் தற்போது ரத்து செய்துள்ளது.
இதனால் அண்டை மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் இருந்து மண் எடுத்து வந்தனர். ஆனால் தற்போது அந்த மாவட்டங்களிலும் மண் எடுக்க அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் செங்கல் சூளை உரிமையாளர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.