அணில் குட்டியுடன் வாக்கு சேகரித்த வேட்பாளர்கள்…

மதுரை மாநகராட்சி நாம் தமிழர் கட்சியில் போட்டியிடும் 4வார்டு வேட்பாளர்கள் ஒன்றாக இணைந்து., சாலையில் கிடந்த அணில் குட்டியை மீட்டு நூதன முறையில் அணில் குட்டியுடன் வாக்கு சேகரிப்பு.

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றனர்., இதில் நாம் தமிழர் கட்சி சார்பில் அவனியாபுரம் பகுதிக்குட்பட்ட 90, 91, 92 மற்றும் 100 ஆகிய நான்கு வார்டுகளை சேர்ந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் நான்கு பேர் ஒன்றாக இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

91 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு மின் பொறியாளராக வேலை பார்க்கக் கூடிய நாம் தமிழர் கட்சியின் இளம் வேட்பாளர் கார்த்திக் மோகன் என்பவரை ஆதரித்து மீனாட்சி நகர், வாசுகி தெரு, விவேகானந்தர் தெரு, எம் ஜி ஆர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக மற்ற வார்டுகளில் போட்டியிடக்கூடிய 90வது வார்டு வேட்பாளர் ராம்குமார் 92வது வார்டு வேட்பாளர் முத்துமணி 100வது வார்டு வேட்பாளர் சுபாசினி ஆகிய வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி நூதன முறையில் வாக்கு சேகரித்தது பொது மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த நிலையில்., மாற்று அரசியலை நோக்கி இளைஞர்கள் செல்வதால் இளைஞர்களாக நிற்கும் தங்களுக்கு ஆதரவு தருமாறு நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வீடு வீடாக சென்று துண்டு அறிக்கை வழங்கி வந்தனர். அப்போது., சாலையில் மயங்கிய நிலையில் கிடந்த அணில் குட்டியை மீட்டு கையில் ஏந்தியவாறு வாக்கு சேகரித்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது மட்டும் இல்லாமல் அரசியல் என்பது அனைத்துயிர்களுக்குமானது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பல மேடைகளில் பேசி வந்ததை கட்சியின் வேட்பாளர்கள் நிரூபித்து காட்டுகிறார்கள் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்களும் மற்றும் அரசியல் விமர்சகர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மேலும்., தாம் வெற்றி பெற்றால் மாதம்தோறும் இருமுறை வாக்காளர்களை சந்தித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது., ஊழலற்ற அரசியலை கொண்டு வருவது., அடிப்படை வசதிகள், சிசிடிவி கேமரா குழந்தைகளுக்கு பூங்கா உள்ளிட்ட அனைத்தும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!