மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் பொதுநலனுக்காக சேவை செய்வோர் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனைகள் செய்வோரை ஊக்கப்படுத்தும் வகையில் அவ்வப்போது பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் வழிகாட்டி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் வழிகாட்டி விருது பெற்ற:மதுரை மாநகர் காவல்துறை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் லில்லிகிரேஸ் அவர்கள் கொரோனா நோய் தடுப்பு ஊரடங்கு காலத்தில் சாலையோரம் வாழ்ந்த மக்களை மீட்டு உதவும் சமூக ஆர்வலர்களை ஒருங்கிணைத்தார்.
அவர்கள் மூலம் நகரின் பல்வேறு இடங்களில் முகாம்களை ஏற்படுத்தி தங்க வைத்து அவர்களின் அடிப்படை தேவைகளுக்காக சட்டத்தின்படி அரசுதுறைகளின் ஒத்துழைப்புடன் அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தார்.
மேலும் பல்வேறு மனிதநேய நற்பணிகளும் செய்துள்ள அவருக்கு வழிகாட்டி மணிகண்டன் வழிகாட்டி விருது வழங்கி கவுரவித்தார்.
அதேபோல் சமூக ஆர்வலர் அசோக்குமார் பொதுநலன் சார்ந்த சமூக சேவைகள் மற்றும் இயற்கையை பாதுகாக்கும் பசுமைப்பணிகளை மற்றும் விழிப்புணர்வுகளை தொடர்ந்து செய்து வருகிறார்.
புத்தகங்கள், விதைப்பந்துகள் மற்றும் பனைவிதைகளையும் சேகரித்து ஆர்வமாக கேட்போருக்கு தானமாக வழங்கி வருகிறார்.
இவரது நற்பணிகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மதுரை மாநகர் காவல்துறை துணை ஆணையர் வழிகாட்டி விருது வழங்கினார்.
இந்த நிகழ்வில் சமூக இடைவெளி காரணமாக சமூக ஆர்வலர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிலர் மட்டும் கலந்துகொண்டனர்.