ஈரோட்டில் திருமுருகப் பெருவிழா மாநாடு-வெல்வது ஒன்றே முதற்பணி! கம்பீரமாக களமிறங்கும் சீமான்-வீரத்தமிழர் முன்னணி முழக்கம்!

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கில் தான் ‘வீரத் தமிழர் முன்னணி’-யை சில ஆண்டுகளுக்கு முன்னர் சீமான் ஆரம்பித்தார். தலை நிலக் குறஞ்சி தந்த தலைவன், தமிழ் இறைவன் நமது முப்பாட்டன் என்பது நாம் தமிழர் கட்சியின் மெய்யியல் நிலைப்பாடு. இதனால் திருமுருகப் பெருவிழாவை அக்கட்சியின் மெய்யியல் பிரிவான வீரத் தமிழர் முன்னணியை “வீரத்தமிழர் முன்னணி வெல்வது ஒன்றே முதற்பணி” என்ற முழக்கத்தோடு நடத்தி வருகிறது. அந்தவகையில் முதல் விழாவாக அறுபடைவீடுகளில் மூன்றாம் படை வீடாக திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்து உள்ள பழனி முருகன் கோயிலில் திருமுருகப்பெருவிழா கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அறுபடைவீடுகளில் ஐந்தாம் படை வீடான திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்து உள்ள திருத்தனி முருகன் கோயில், அறுபடைவீடுகளில் முதற்படை வீடான மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோயில், அறுபடைவீடு வீடுகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்து உள்ள இரண்டாம் படை வீடான  திருச்செந்தூர் முருகன் கோயில், நான்காவது படை வீடுகளில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோனம் வட்டத்தில் உள்ள சுவாமிமலை, ஏழாம் படை வீடு என போற்றப்பட்டு வரும் கோயம்புத்தூர் மாநகரில் அமைந்துள்ள மருதமலை முருகன் கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்து உள்ள திருப்போரூர் முருகன் கோயில்,  உள்ளிட்ட  கோயில்களில்  ஒவ்வொரு வருடமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து எட்டாவது ஆண்டு திருமுருகப்பெருவிழா இந்த முறை, ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் திண்டல் மலை முருகன் கோயிலில் நடைபெறவுள்ளது என வீரத்தமிழர் முன்னணி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம்தமிழர் கட்சியின் பண்பாட்டு மீட்பு பாசறையான வீரத்தமிழர் முன்னணி வருடந்தோறும் நடத்துகின்ற “திருமுருகப் பெருவிழா” இந்த முறை, ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் திண்டல் மலை முருகன் கோயிலினை மையமாக வைத்து வருகின்ற 14-02-2023 திண்டல் மலை முருகன் கோவில், ஈரோடு  (செவ்வாய் கிழமை )
நேரம் : மாலை 4 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் மற்றும் பறையிசையோடு தொடங்க இருக்கும் இந்த திருமுருகப் பெருவிழாவில் அண்ணன் சீமான் அவர்கள் பெருவிழா பேருரை நிகழ்த்த இருக்கிறார். இது மட்டுமின்றி தமிழகத்தில் இருக்கும் முக்கியமான அறிஞர் பெருமக்கள் மேடையேறி அரியபல கருத்துக்களை இந்த நிகழ்வில் உரையாக நிகழ்த்த இருக்கிறார்கள்.  திண்டல் மலை முருகன் கோயிலானது ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்கின்ற வழியின் முக்கிய சாலையில் அமைந்துள்ளது.

தமிழர் இறை முருகனை கொண்டாடும் இந்த நிகழ்விற்கு தமிழகம் முழுமைக்கும் உள்ள வீரத்தமிழர் முன்னணி உறவுகள் மற்றும் நாம்தமிழர் கட்சி உறவுகள் பெருந்திரளாக அவசியம் வந்து கலந்துகொள்ள வேண்டுகிறோம். ஈரோடு மாவட்டத்தில் (ஈரோடு கிழக்கு தொகுதி) இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், தமிழகம் முழுமைக்கும் பிரச்சாரத்திற்கு வர இருக்கின்ற உறவுகள் இந்த நிகழ்வினையும் மையப்படுத்தி தங்களுடைய பயணத்திட்டத்தை வடிவமைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.

இந்த நிகழ்வில் பெருந்திரளாக அனைவரும் வந்து கலந்துகொள்ளும் படி கேட்டுக்கொள்கிறோம் என வீரத்தமிழர் முன்னணி சார்பாக அறிக்கை வெளியாகி உள்ளது. இவ்விழாவிற்கான அழைப்பிதழ் தயாராகி கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!