கன்னியாகுமரி: பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வைக் கண்டித்தும்,
கூடங்குளம் அணு உலைகளை மூட கோரியும், 5 மற்றும் 6 வது அணு உலைகள் நிறுவுவதை கைவிட கோரியும், எரிஎண்ணெய் விலை உயர்வை குறைத்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டியும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, “கொரோனா பரவலால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து மக்கள் மேலும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இப்போராட்டத்தில் மத்திய மாவட்ட தலைவர் பபின் தாஸ் ரிசோ மற்றும் செயலாளர் ஆன்றலின் சுஜித் ஆகியோர் தலைமை வகித்தனர், கிழக்கு மாவட்ட பொருளாளர் அனிட்டர் ஆல்வின், பத்மநாபபுரம் தொகுதி செயலாளர் சீலன் முன்னிலை வகித்தனர்.
மாநில பேச்சாளர் கிம்லர் கண்டன உரையாற்றினார்.
மத்தியமாவட்ட தகவல் தொழில்நுட்பப் பாசறை இணை செயலாளர் ரீகன் ரொனால்டு,
பத்மநாபபுரம் தொகுதி தலைவர் ஆல்பன், இணைச் செயலாளர் ராஜா, துணைச் செயலாளர் கிப்சன், பொருளாளர் ஜெர்பின் ஆனந்த், குளச்சல் தொகுதி மகளிர்பாசறை செயலாளர் ஆன்றணி ஆஸ்லின், தலைவர் கேபா, துணைத் தலைவர் செல்வகுமார், பொருளாளர் ரூபன், செய்தி தொடர்பாளர் ஜெபின், கன்னியாகுமரி தொகுதி செயலாளர் ரூபன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
