
தற்போது இலங்கை பொருளாதார வீழ்ச்சியால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. விலைவாசி உயர்ந்திருக்கிறது. நாணயத்தின் மதிப்பு சரிந்திருக்கிறது. அமெரிக்க டாலர்களில் நடக்கும் இறக்குமதிகள் முடங்கியிருக்கின்றன. இறக்குமதியை நம்பியிருக்கும் தொழில்துறைகள் திணறிக் கொண்டிருக்கின்றன. மக்களும் எதிர்க்கட்சிகளும் அரசுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.இலங்கையில் அடுத்து நடக்கப் போவது என்ன? அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு எப்போது முடிவுக்கு வரும், அரசியலில் என்னென்ன மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்கிற அடிப்படையில் அடுத்த நடக்க வாய்ப்புள்ள நிகழ்வுகள் குறித்து நிபுணர்கள் தங்களது கணிப்புகளைக் கூறி வருகின்றனர் அந்த வரிசையில் ஹாங்காங்கை சீனா
தன்னுடன் இணைத்தது போல
இலங்கை விரும்பினால்
கூடுதல் சலுகையுடன்
இந்தியாவுடன்
இணைத்துக்கொள்ளலாம்.

தற்போதுள்ள இலங்கையின்
அனைத்து பிரச்சினைகளும்
உடனே தீர்ந்துவிடும்.கச்சத்தீவை மீட்கவேண்டிய
அவசியம் இல்லை..
நம் தமிழக மீனவர்களுக்கு
எல்லை பிரச்சினை வராது.தமிழர் சிங்களர்
இனப்பிரச்சினை
முடிவுக்கு வரும்.இந்தியாவிற்கும் இன்னொரு
முன்னேறிய மாநிலம் கிடைக்கும்..
இலங்கைக்கும் 130 கோடி
உறவுகள் கிடைப்பார்கள்..
அமெரிக்காவும் சீனாவும்
தங்கள் கடைகளை
இலங்கையில் போட்டு
இந்தியாவுக்கு குடைச்சல்
தர மாட்டார்கள்.

இரண்டு வருடத்தில் தனுஷ்கோடி
அரிச்சல் முனையிலிருந்து
இலங்கையின் தலைமன்னாருக்கு
சிறப்பான பாலத்தைக்கட்டி
போக்குவரத்தை எளிதாக்கலாம்..மேலும் சில வருடங்களில்
ராமேஷ்வரம் வரை செல்லும்
ரயில்பாதையை இலங்கைக்கும்
நீட்டிக்கலாம்.தூத்துக்குடி கொழும்பு
கப்பல் போக்குவரத்தை
கூடுதலாக்கலாம்.தமிழகத்தில் விளைச்சல்
உபரியாக உள்ள வெங்காயம்
தக்காளி காய்கறிகள் அரிசி
போன்றவை 6 மணி நேரத்தில் இலங்கைக்கு சென்றுவிடும்..

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு
தரை மார்க்கமாக செல்லும்
சுற்றுலா அதிகரிக்கும்..
இதன்காரணமாக தமிழகத்தின்
மதுரை இராமேஸ்வரம் உட்பட
தமிழகத்தின் மத்திய கிழக்கு
பகுதிகள் பொருளாதாரத்தில்
மேம்படும்.சிங்களத் தீவினுக்கோர்
பாலம் அமைப்போம்,சேதுவை மேடுறுத்தி
வீதி சமைப்போம்”இதுவும் 100 வருடத்திற்கு முன்பே
பாரதியார் கூறியுள்ள ஒன்றுதான்!

இலங்கையை சீனாவின் பிடியில்
இருந்து மீட்க இதைவிட
சிறந்த தருணம் இல்லைங்க
பிரதமர் அவர்களே..அதனால் பிரதமர் அவர்கள் இலங்கையை இந்தியாவோடு இனைக்க வழிவகை செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.