மதிமுக, திமுக, பாஜக அதெல்லாம் நேற்று! இன்று முதல் ஈ.பி.எஸ்-க்கு துணையாக நிற்பேன்.. அதிமுகவில் இணைந்த டாக்டர் சரவணன்

மதுரையில் பிரபல மருத்துவர் டாக்டர் சரவணன், இவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது இருந்த பற்றின் காரணமாக மதிமுகவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்தார். இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டு தீவிரமாக செயல்பட்டு வந்தார். அப்போது அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்ட விண்ணப்ப படிவத்தில் ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லையென நீதிமன்றத்தல் வழக்கு தொடரப்பட்டார்.

இதனையடுத்து அரவங்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தேர்தல் முடிவு செல்லாது என நீதிமன்றம் அறிவித்தது. தொடர்ந்து நடைபெற்ற மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று திமுக சட்டமன்ற உறுப்பினராக டாக்டர் சரவணன் வெற்றிபெற்றார்.

இந்தநிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட மீண்டும் திமுக வாய்ப்பு வழங்கும் என எதிர்பார்த்தார். ஆனால் அந்த தொகுதி கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட்க்கு திமுக ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த சரவணன் பாஜகவில் இணைந்து மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பையும் பெற்றார். ஆனால் இந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இதனையடுத்து டாக்டர் சரவணன் மதுரை நகர் மாவட்ட தலைவரானார், தொடர்ந்து கட்சி பணிகளிலும் தீவிரம் காட்டினார், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மதுரையில் பிரம்மாண்டமான வரவேற்பு கொடுத்து பொதுக்கூட்டம் நடத்தினார்.
சமீபத்தில் மதுரை வந்த திமுக அமைச்சர் ஏ.வ. வேலுவை ரகசியமாக சென்று மதுரையில் அவர் தங்கியிருந்த தனியார் ஹோட்டலில் சந்தித்து நீண்ட நேரம் பேசியுள்ளார். அதில் திமுகவில் இணைவது பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள், தற்பொழுது மதுரை நகர் பாஜகவில் பொறுப்பில் உள்ள பெரும்பாலனோர் என்னுடன் இணைந்து திமுகவில் இணைய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் சரவணன்.
மதுரை ஒத்தக்கடையில் ராஜகண்ணப்பன் திமுகவில் இணைந்தது போன்று பிரமாண்டமாக நான் ஏற்பாடு செய்கிறேன் என சரவணன் உறுதியளித்துள்ளார். கிட்டத்தட்ட திமுகவில் சரவணன் இணைவது உறுதியான பின்பு, பழனியில் நடந்த பாஜக மாவட்ட தலைவர் பயிற்சி முகாமில் சரவணன் கலந்து கொள்ளவில்லை. இதன் பின்பு விசாரித்ததில் சரவணன் திமுக பக்கம் செல்ல இருக்கும் தகவல் அண்ணாமலைக்கு தெரிய வந்துள்ளது. இதன் பின்பு டெல்லி பாஜகவில் தன்னை பற்றி ஓவர் பில்டப் கொடுத்து வைத்திருக்கும் அண்ணாமலை, ஒரு மாவட்ட தலைவர் அந்த மாவட்டத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகளை கூண்டோடு திமுகவில் இணைந்தால், அண்ணாமலைக்கு மிக பெரிய அவப்பெயரை டெல்லி தலைமை கருத்தில் கொள்ளும் என்பதால், உங்களுக்கு என்ன வேண்டுமானால் செய்கிறேன், அவசரப்பட்டு திமுகவிற்கு சென்று விட வேண்டாம் என கெஞ்சி கூத்தாடி தற்காலிகமாக சரவணன் திமுகவில் இணைவதை நிறுத்தி வைத்துள்ளார் அண்ணாமலை.
ஆனால் திமுகவுக்கு போகிறேன் என்பவரை எதற்காக அண்ணாமலை தொங்கி கொண்டிருக்க வேண்டும், இப்போதைக்கு வேண்டுமானால் சரவணனை தடுக்கலாம் ஆனால், சீட்டு கிடைக்கவில்லை என்பதற்காக கட்சியில் காலையில் இணைந்து மதியம் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சரவணன் எப்படி இருந்தாலும் அவர் திமுகவுக்கு செல்வது உறுதி தான் என்கின்றனர் பாஜக மூத்த நிர்வாகிகள்.

இந்த தகவல் வேகமாக பரவிய நிலையில் டாக்டர் சரவணனிடம் ஏராளமானோர் இது தொடர்பாக விசாரிக்க தொடங்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் திடீரென அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதில் நான் பாஜக கட்சியில் மதுரை மாவட்ட தலைவராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். தமிழகத்தில் எங்களது மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலும் மதுரையில் எனது தலைமையிலும் பாஜக அபார வளர்ச்சி பெற்று வருகிறது. இந்தநிலையில் யாரோ வீண் புரளியை ஏற்படுத்திவருவாதக அந்த அறிக்கையில் கூறியுள்ளார். எனவே டாக்கர் சரவணன் திமுக செல்ல இருப்பதாக வெளியான தகவலுக்கு தற்போது முற்றுப்புள்ள வைக்கப்பட்டது.

மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரை விமான நிலையத்தில் தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினரிடையே ஏற்பட்ட தகராறில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் காா் மீது பா.ஜ.க.வினா் காலணியை வீசினார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, நிதி அமைச்சரை நள்ளிரவில் சந்தித்த சரவணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று சென்னையில் அ.தி.மு.க. இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

தொடர்ந்து வீடியோ வெளியிட்டுள்ள சரவணன், 2023 புத்தாண்டு தொடக்கத்தில் அ.தி.மு.க.வில் என்னை இணைந்துக் கொண்டேன். வரக்கூடிய காலங்களில் கட்சி வலுப்பெற எடப்பாடி பழனிசாமிக்கு துணையாக செயல்படுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!