
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ளது தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை. இங்கு ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்திலேயே அரவை துவக்கப்படும். தென் மாவட்டத்தின் பிரதான சர்க்கரை ஆலையான இந்த சர்க்கரை ஆலை அரவை துவக்காததால் ஏராளமான விவசாயிகள், ஆலைத் தொழிலாளர்கள் பாதிப்பில் உள்ளனர்.
மேலும் கடந்த 24 மாத காலமாக பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காமல் ஆலை நிர்வாகம் தாமதப்படுத்தி வருகிறது. இது குறித்து அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இந்தாண்டு அரவை துவக்குவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் விவசாயிகள், தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் உட்பட சுமார் 20000 தொழிலாளர்கள் பாதிப்பில் உள்ளனர்.
அதனால் சர்க்கரை ஆலையில் அரவையை உடனடியாக துவக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுவதாக அறிவித்திறிந்த நிலையில் ஆலை நிர்வாகத்தினரின் பேச்சுவார்த்தையை ஏற்று தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மணிகண்டன் மற்றும் முருகன் கூறும்போது
கடந்த கால தேர்தலின் போது அமைச்சர் மூர்த்தி மற்றும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர்.ஆலையை துவக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தனர். ஆனால் ஆலையைத் தொடங்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது சுமார்70 ஆயிரம் டன்கரும்பு தயாராக உள்ள நிலையில் சர்க்கரை ஆலை துவக்க இதுவே போதுமானது.
ஆனால் நிர்வாகத்தின் மெத்தன போக்கு மற்றும் அரசின் முறையற்ற நடவடிக்கையால் டிசம்பர் மாதம் துவங்க வேண்டிய கரும்பு அரவை துவக்கப்படாமல் உள்ளது.
போதிய கரும்பு உள்ளதால் அரவையை உடனடியாக.துவக்க வேண்டும் என்று விவசாய சங்கங்கள் போராடி வரும் நிலையில் ஆலை நிர்வாகம் 40 ஆயிரம் டன் கரும்பு தான் உள்ளது என்றும் 2 லட்சம் டன் கரும்பு இருந்தால் தான் ஆலையை துவக்க முடியும் என்று கூறுவது வேதனைக்குரியது.
மேலும் ஆலையை துவக்கினால் இணை மின் நிலையம் மூலம் மின்சாரம் எடுக்க வாய்ப்புள்ளது, மத்திய அரசு சொல்வது போல் எத்தனால் எடுக்க வாய்ப்புள்ளது இதையெல்லாம் கருத்தில் கொண்டு சர்க்கரை ஆலையை துவக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். துவக்காத பட்சத்தில் இந்த ஆண்டு எங்கள் குடும்பத்தினர் அனைவரும் “கருப்பு பொங்கலாக” அனுசரிக்க உள்ளோம் என்று தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.