
திருவண்ணாமலையில் காங்கிரஸ் கட்சி சார்பாக நீர் மோர் வழங்கும் விழா
திருவண்ணாமலையில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், கிரிவலப் பாதையில் அமைந்துள்ள காமராசர் சிலை அருகே வெயிலின் தாக்கத்தை தணிக்க திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் SC துறையின் சார்பாக கோடைகால நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.

காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களின் நல்ஆசியுடன் கோடைகால நீர்,மோர், பழம் வழங்கும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் SC துறை மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினருமான கே.குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நீர், மோர், சர்பத், இளநீர் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது. இதில் அப்பகுதி கட்சி நிர்வாகிகள் , பொதுமக்கள் மற்றும் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு வெயிலின் சூட்டை தணித்தனர்.





இந்நிகழ்வில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் பாச்சல் முனியசாமி, தான்டிபன், மணி, அருண், விஸ்வநாதன், சிவாஜி, பாஸ்கரன், பொன்னுரங்கன், இளையராஜா, ஆனந்த், பிச்சைக்காரன், நாராயணசாமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள்கலந்து கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.