‘ஆத்தாடி ஆத்தா..’ எத்தத்தண்டி –  விகேபுரம் வீட்டின் அருகே பதுங்கி இருந்த 15அடி நீளமுள்ள ராஜ நாகம்!

‘ஆத்தாடி ஆத்தா..’ எத்தத்தண்டி –  விகேபுரம் வீட்டின் அருகே பதுங்கி இருந்த 15 அடி ராஜ நாகம் மீட்பு.!

பெயருக்கு ஏற்ப பிரமிக்க வைக்கும் நீளமான உருவமும், மூன்று முதல் நான்கு அடி உயரம் வரை படமெடுத்து நிற்கும் அதன் தோற்றமும் பார்ப்பவரை கதிகலங்கச் செய்துவிடும்.

அடிப்படையில் மனிதர்களிடம் இருந்து விலகியே இருக்கும் என்றாலும், ஆய்வுகளின் போது அல்லது மீட்பு முயற்சியில் அதைக் கையாளும் போது அரிதான சூழ்நிலைகளில் ராஜநாகம் மனிதர்களைத் தாக்கும் அபாயமும் இருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பாபநாசம், காரையாறு அணைகள் அமைந்துள்ளன. பாபநாசம் வனப்பகுதியில் இருந்து முதல் ஊராக அனவன் குடியிருப்பு என்ற கிராமம் அமைந்துள்ளது. வனப்பகுதிகள் சூழ்ந்த இக்கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயிகள் நெல், வாழை, கரும்பு போன்ற பயிர்களை பயிரிடுவார்கள்.

இந்த நிலையில், கடந்த பல ஆண்டுகளாக அருகில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து யானை, கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் அனவன் குடியிருப்பு ஊருக்குள் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. 

இச்சம்பவம் தொடர்கதையாக நடைபெற்று வரும் சூழலில் நேற்றைய முன்தினம்  விக்கிரசிங்கபுரம் அருகேயுள்ள திருப்பதியாபுரத்தை சேர்ந்த மாடக்கண்ணு மகன் சந்தோஷ் குமார் என்பவரது வீட்டின் அருகே ராஜா நாகம் பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பாபநாசம் வனச்சரகத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வன உயிரின காவலர் முத்துக்குமார், வன காவலர் அசோக்குமார் சூழல் காவலர்கள் மணிகண்டன் ஆசீர், மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சந்தோஷ்குமார் வீட்டில் பின்புறம் உள்ள காளியம்மன் கோயிலில் பதுங்கியிருந்த 15 அடி நீளமுள்ள ராஜநாகத்தை லாவகமாக பிடித்து கோவில்தேரி பீட் அடர்ந்த வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!