

பாபநாசத்தில் செயல்படாமல் உள்ள பேரூராட்சி சமுதாயக்கூடத்தை பயன்பாட்டிற்கு திறக்கப்படுமா பொதுமக்கள் எதிர்பார்ப்பு!
பாபநாசம் பேரூராட்சி சமுதாயக்கூடம் புதியதாக கட்டி பல வருடமாக பயன் பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளதால் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பல லட்ச ரூபாய் வருவாய் இழப்பீடு ஏற்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் பொது மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி சார்பில் பேரூராட்சி அலுவலகம் அருகே பாலாஜி நகரில் சுமார் 40 லட்ச ரூபாய் செலவில் ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் சிறிய அளவிலான விழாக்கள் திருமண நிகழ்ச்சிகள் குறைந்த வாடகையில் நடத்துவதற்கு ஏதுவாக பொது சமுதாயக்கூடம் புதியதாக கட்டி முடிக்கப்பட்டு பல வருடங்களாக பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் பூட்டிய நிலையில் உள்ளது இதன் மூலம் ஏழை. எளிய மக்கள் பயனடையும் வாய்ப்பு பறிக்கப்படுவதோடு பேரூராட்சி நிர்வாகத்திற்கு வருடத்திற்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பீடும் ஏற்ப்பட்டு வருகிறது
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினர் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பேரூராட்சி சமுதாயக்கூடத்தை உடனடியாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என பாபநாசம் பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.