வீட்டு சுவர் மீது ஏறி இறங்கும் பாம்பு -சிசிடிவி வீடியோ
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என சொல்வார்களே. ஆனால் இந்த வீடியோவை பார்த்தாலே போதும் அத்தனை நடுக்கங்கள் ஏற்படுகின்றன.
காட்டு விலங்குகளுக்கு பிறகு ஊர்வனவற்றில் நாம் அதிகமாக கண்டு அஞ்சுவது என்றால் அது பாம்புகள் ஆகும். காரணம், பாம்புகள் கடித்தால் மரணம் வரை நேரிடும் வாய்ப்புள்ளது என்பதால்!. அது போல் தேள்களும் அதிக விஷம் உடையவைதான். ஆனால் அவற்றை அடித்துவிடலாம். தேளை அடிப்பது போல் பாம்புகளை பிடிப்பதோ அடிப்பதோ அத்தனை எளிதல்ல. அப்போதெல்லாம் வாய்க்கால் வரப்பு, விவசாய நிலங்கள், புதர்கள் உள்ளிட்டவற்றில்தான் பாம்புகளை பார்த்த அனுபவம் உண்டு.
பொதுவாக சில பாம்புகள் மரம் ஏறும், சில பாம்புகள் சில அடி உயரம் வரை சுவரையோ அல்லது வேறு எதனையோ பிடித்து ஏறும் என சொல்வார்கள். ஆனால் பாம்புகள் மிக உயரமான சுவற்றில் ஏறியதை பார்த்துள்ளீர்களா? இந்த சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்தாலே மெய் சிலிர்க்கும் அளவுக்கு உள்ளது.
ஆனால் இன்று செய்திகளில் வருவது, வண்டியினுள் பாம்பு, இரு சக்கர வாகன என்ஜினில் பாம்பு, இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் வைக்கும் இடத்தில், டாய்லெட், வாஷிங்மெஷின் என பாம்புகள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியே வந்துவிட்டன. இதற்கு இன்னொரு காரணம் அதன் இருப்பிடத்தை நாம் ஆக்கிரமித்ததுதான்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் தனக்கன்குளம் அருகே உள்ள வி. பி. சித்தன் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இன்று காலை அப்பகுதியில் உள்ள வீட்டு வாசலில் உள்ள சுற்றுச் சுவர் மீது பாம்பு ஒன்று ஏறி இறங்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.