Breaking:என்னிடம் அதிகாரம் இருந்தால் சேட்டை செய்யமாட்டார்கள்.! பாஜக போடும் நாடகத்தில் நாங்களும் நடிகர்கள்.!

மதுரை அவனியாபுரம் பெரியார் சிலை அருகே நாம் தமிழர் கட்சி கொடியேற்ற நிகழ்வு மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் தொகுதி அவனியாபுரம் பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலை அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று மிகப்பெரிய கொடிக்கம்பம் புதிதாக வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்க பணிக்காக அப்பகுதியில் அகற்றப்பட்ட மரங்களை மீண்டும் நடுவதற்காக புதிதாகப் மரக்கன்றுகள் நடும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ்விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை தந்தபோது 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்து அவருக்கு வரவேற்பளித்தனர். அதேபோல் AXN சிலம்பாட்ட கலை மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து மிகப்பெரிய கொடிமரத்தில் தங்களது கட்சி கொடியை ஏற்றினார். அதனை தொடர்ந்து அப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ் தாய் வாழ்த்துக்கு தமிழகத்தில் முன்னுரிமை கொடுக்காத சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்த கேள்விக்கு.?

தமிழ் மொழி இரண்டாம் தாயாக இருப்பதாக எங்களுக்கு தெரிகிறது இது இந்த செயல் வரம்பு மீறிய சேட்டை என்பது தெரிகிறது. எங்களைப் போன்றவர்களிடம் அதிகாரம் இருந்தால் இதுபோன்ற சேட்டைகளை அவர்கள் செய்ய மாட்டார்கள். தமிழ் தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கும் பொழுது அவரை அவமதிக்கும் செயல்., அதேபோல் ஜனகனமன பாடல் ஒலிக்கும் பொழுது நான் அமர்ந்து இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்.? என்று கேள்வி எழுப்பினார்.

அவரவர்களுக்கு அவரது தாய் பெரிதோ எனக்கு எங்கள் தாய் பெரிது அந்த மரியாதையில் நடந்து கொள்வதே நாட்டின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் சரியானது.

பிளஸ் 2 வகுப்பு 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடங்களில் மாணவர்கள் தோல்வியானது குறித்த கேள்விக்கு.?

தமிழ் மொழியை பள்ளி மாணவர்களை படிக்கவில்லை தமிழ் படித்தால் கேவலம் தமிழ் படித்தால் மதிப்பில்லை இவற்றை சொல்லி இன்றைக்கு மாணவர்கள் தமிழில் தோற்றுப் போகிறார்கள்.

அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் அவமதிப்பு குறித்த கேள்விக்கு.?

அதிமுக கட்சிக்குள் இருக்கக்கூடிய பிரச்சினை அவற்றை இருவரும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். இதைப் பற்றி என்ன பேசினாலும் பிரச்சனை தான் வரும் நான் இருவரையும் மதிக்கக்கூடிய அவன் அவர்களை நேசிக்கிறேன் இருவரும் ஒன்றாக இருந்து ஏதாவது பண்ணுங்கள்.

ஒரு சின்ன தவறு இவ்வளவு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது., இருவரும் எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் யார் பக்கம் நிற்பது என்பது கேள்விக்குறியாக உள்ளது இருவரும் கலந்துபேசி முடிவெடுக்க வேண்டும்.

திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென ஜேபி நட்டா சோனியாகாந்தி கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறித்த கேள்விக்கு.?

பாரதிய ஜனதா கட்சி எப்போதும் பெரிய நாடகத்தை போடும் அப்துல் கலாமை கொண்டுவந்தவர்கள் குஜராத் கலவரத்தில் உலக நாடுகளின் சரிவை சந்தித்தது இந்தியா இந்தியாவின் நன்மதிப்பு போய்விட்டது. சந்திரபாபு நாயுடு மற்றும் ஒருசிலர் சேர்ந்து தான் ஐயா அப்துல் கலாமை வாஜ்பாயிடம் அறிமுகம் செய்துவைத்து குடியரசுத் தலைவராக ஆக்கினார்கள். மத்திய அரசு எத்தனை பழங்குடி மக்களை அமைச்சராக ஆகியுள்ளனர்.? பிஜேபி நாடகம் செய்து வருகிறது. வேண்டுமென்றால் திரௌபதி முரமுவை பிரதமராக அறிவியுங்கள் என்று கேள்வி எழுப்பியதுடன் பிஜேபியை நாங்கள் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம்.

சகோதரத்துவம் சமத்துவத்தைப் பற்றி பேசும் பிஜேபி நாடகத்தை நடத்தி வருகிறது அந்த நாடகத்தில் நாங்களும் நடிகர்கள்.

அக்னிபாத் திட்டத்திற்கு ஆர் எஸ் எஸ்ஸின் பின்னணி இருப்பது குறித்த கேள்விக்கு.?

அக்னிபாத் திட்டத்திற்கு உண்மையிலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பு தான் அவர்களின் திட்டத்திற்காக ஆட்களை எடுக்கிறது., வீரமணி காலதாமதமாக பேசுகிறார் உண்மையிலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பு தன்னுடைய கட்சிக்கும் அமைப்பிற்கும் தான் ஆட்களை எடுக்கிறது. 4 ஆண்டுக்கு எதற்கு ராணுவ வீரர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் வெளிப்படையாக பயிற்சி கொடுப்பதற்கு பதிலாக இராணுவம் என்ற போர்வையில் பயிற்சி அளித்து மக்களை தாக்குவதற்கு திட்டம் தீட்டுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!